உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில்வே வாரிய தலைவராக பட்டியலினத்தைச் சேர்ந்தவர் நியமனம்

ரயில்வே வாரிய தலைவராக பட்டியலினத்தைச் சேர்ந்தவர் நியமனம்

புதுடில்லி: ரயில்வே வாரியத்தின் தலைவராக முதல்முறையாக பட்டியலினத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.இவ்வாரியத்தின் தலைவராக உள்ள ஜெய வர்மசின்ஹா வரும் 31-ம் தேதியுடன் பணிநிறைவு பெறுகிறார்.இதையடுத்து இந்திய ரயில்வே மேலாண்மை சேவை பிரிவில் பணியாற்றிவரும் சதீஷ்குமார், ரயில்வே வாரியத்தின் அடுத்த தலைவராக நியமிக்கப்பட்டார்.இவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது நியமனத்திற்கு அமைச்சரவை நியமன குழு ஒப்புதல் அளித்து. வரும் செப்.01-ம் தேதி முதல் பொறுப்பேற்கிறார். இதன் மூலம் ரயில்வே வாரிய தலைவர் பதவிக்கு முதன் முறையாக பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ganesh T
ஆக 31, 2024 09:58

நல்ல விஷயம் இது முன்னுக்கு வந்தது வந்து பாராட்டக்கூடியது.


lana
ஆக 29, 2024 18:20

ஒரு பப்பு அழகு போட்டி இல் எல்லாம் பட்டியல் இனம் இல்லை என்று கூறியுள்ளார். 60 ஆண்டு காலம் இவர்கள் ஆட்சியில் ஏன் இது போன்ற செய்ய முடிந்த பதவி இல் செய்ய வில்லை.


குமரன். தென்காசி
ஆக 29, 2024 13:47

ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது தகுதியை சார்ந்து இருக்க வேண்டும் ஒதுக்கீடு மற்றும் பரிந்துரை என்றால் வளர்ச்சியை பாதிக்கும்


N.Purushothaman
ஆக 29, 2024 07:32

வாரிய தலைவர் பதவி எல்லாம் அரசியல்வாதிகளுக்கு ஒதுக்கப்பட்டு கொண்டு இருக்கும் காலகட்டத்தில் அவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார் ....சீனியாரிட்டிப்படி வேறு சிலர் இருந்திருக்கலாம் ..அதை பின்தள்ளி இவருக்கு மத்திய அரசு கொடுத்து இருக்கும் என்று தோன்றுகிறது ....ஏனெனில் கிட்டத்தட்ட உயர்பதவிக்கு வந்துவிட்ட அவர் பணி ஓய்வுக்கு முன் தலைமை பதவியில் அமர்த்தி அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்பது அரசின் எண்ணமாக இருந்திருக்கலாம் ....


Kanakala Subbudu
ஆக 29, 2024 03:56

அவர் தகுதி அடிப்படையில் இயல்பாக பதவி பெற்றிருந்தால் கூட ஜாதி அடிப்படையில் பெற்றதாக அறிவிக்கப்பட்டது போல


naranam
ஆக 29, 2024 03:47

இவருடைய இனம் மட்டுமே இவருக்குத் தகுதி என்றால் அது முற்றிலும் தவறு..


karthikeyan
ஆக 29, 2024 01:21

பதிவில் எதற்கு இனம்?


தாமரை மலர்கிறது
ஆக 28, 2024 23:47

தகுதி அடிப்படையில் நியமனம் செய்வது தான் சரி. பிறப்பின் அடிப்படையில் செய்ய கூடாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை