உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.185 லட்சம் கோடியாக அதிகரிக்கும் மத்திய அரசின் கடன்

ரூ.185 லட்சம் கோடியாக அதிகரிக்கும் மத்திய அரசின் கடன்

புதுடில்லி : நடப்பு நிதியாண்டில், மத்திய அரசின் கடன், 185 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 56.8 சதவீதமாக இருக்கும் என, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்து உள்ளார். லோக்சபாவில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:-கடந்த நிதியாண்டில், கடன் 171.78 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 58.20 சதவீதம்.நிதிக்குழுவின் பரிந்துரைப்படி, 2021 - 22ல், மாநில அரசுகளுக்கு அளிக்கும் நிகர கடனுக்கான அதிகபட்ச வரம்பு, மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மேலும், மூலதன செலவு அதிகரிப்பை சமாளிக்க, மாநில உள்நாட்டு உற்பத்தியில் கடன் வாங்கும் உச்சவரம்பு, 0.50 சதவீதமாக்கப்பட்டது.இதற்காக, ஒவ்வொரு மாநிலத்திற்கும் மூலதன செலவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஆரூர் ரங்
ஜூலை 30, 2024 12:00

பல வளர்ந்த நாடுகளின் கடன் அவற்றின் ஜிடிபி யின் 400 சதவீதம் வரை உள்ளது நாம் எவ்வளவோ தேவலாம்.


அப்புசாமி
ஜூலை 30, 2024 08:22

பழைய கடன் பத்து கோடி. அதை அடைச்சுட்டு புதுக்கடனா நூறு கோடி. பா.ஜ மாடல்


Kasimani Baskaran
ஜூலை 30, 2024 05:39

உள்ளக்கட்டமைப்பு மேம்பாடு என்பது வரலாறு காணாத அளவில் இருப்பதால் கடன் அதிகரிக்கத்தான் செய்யும். வரி வசூல் நேர்மையாக இருக்கும் பட்சத்தில் இதெல்லாம் எளிதாக அடைக்கக்கூடியதுதான்.


தாமரை மலர்கிறது
ஜூலை 30, 2024 00:39

தொழில் துவங்க மட்டுமே கடன் கொடுக்கப்பட வேண்டும். அதைவிட்டு மாநில அரசுகள் இலவசங்கள் கொடுக்க கடன் கொடுக்கப்பட கூடாது. நஷ்டத்தில் செல்லும் அரசு நிறுவனங்களை உடனடியாக தனியாரிடம் கொடுக்க வேண்டும். மஹாத்மா காந்தி இலவச நூறு நாள் வேலை திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். நுகர்வோர் கடனை அதிகரித்து அதன் மூலம் தொழில் உற்பத்தியை பெருக்க நினைப்பது ஒருவகையில் ஏற்றுக்கொள்ள தக்கது. கட்டிடம், கார் வாங்க மக்களுக்கு கடன் கொடுப்பது நல்லது. இதன் மூலம் தொழில்துறை வளர்ச்சி பெரும்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ