உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மயிலாடுதுறை விரைவு ரயில் கடலுார் வரை நீட்டிப்பு

மயிலாடுதுறை விரைவு ரயில் கடலுார் வரை நீட்டிப்பு

பெங்களூரு: தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:ரயில் எண் 16232: மைசூரிலிருந்து மாலை 4:45 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறையை மறுநாள் காலை 6:45 மணிக்கு சென்றடையும். அங்கிருந்து புறப்பட்டு சீர்காழி, சிதம்பரம் வழியாக கடலுாரை காலை 8:35 மணிக்கு சென்றடையும்.மறுமார்க்கத்தில் ரயில் எண் 16231: கடலுாரில் இருந்து மாலை 3:40 மணிக்கு புறப்பட்டு, சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை வழியாக மைசூரு வந்தடையும். மைசூரு - மயிலாடுதுறை ரயில் நிறுத்தங்களில் எந்த மாற்றமும் இல்லை.

ரத்து

பெங்களூரு யார்டு, பெங்களூரு கன்டோன்மென்டில் ரயில்வே பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே, ரயில் எண் 12658: பெங்களூரு சிட்டி - சென்னை சென்ட்ரல் தினசரி அதிவிரைவு ரயில், ஜூலை 30, ஆக., 6, 13ம் தேதிகளிலும்; மறுமார்க்கத்தில் ரயில் 12657: சென்னை சென்ட்ரல் - பெங்களூரு சிட்டி தினசரி அதிவிரைவு ரயில், ஜூலை 31, ஆக., 7, 14ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகின்றன.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை