உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.,சில் சேரலாம் : தடையை நீக்கியது மத்திய அரசு

அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.,சில் சேரலாம் : தடையை நீக்கியது மத்திய அரசு

புதுடில்லி: அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர விதிக்கப்பட்ட தடையை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.கடந்த 1960 களில் இந்திரா பிரதமராக இருந்தபோது ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் அரசு ஊழியர்கள் சேரவும், அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது. முன்னதாக 1948 ல் தேசதந்தை மகாத்மா காந்தி படுகொலைக்கு பின் அந்த அமைப்புக்கு சர்தார் வல்லபாய் படேல் தடை வித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=05sxw1vy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் 3 வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடி தலைமையிலான பா.ஜ., அரசு இந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இனி அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேரலாம் .அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 58 ஆண்டுகால தடை நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தடையை நீக்கியதற்கு காங்.,.உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Sankarlal
ஜூலை 23, 2024 21:10

WELCOME


Sankarlal
ஜூலை 23, 2024 21:10

ஆர்.ஸ்.ஸ். தேச பக்தர் இயக்கம். எங்கு எல்லாம் இயற்கை இடர்பாடுகள், சீன ஆக்ரமிப்பு காலங்களில் கையலாகாத நேரு கூட சுயம் சே வகர்களைப் பாராட்டினார். ஆனால் இசுலாமிய கிறித்துவ கூட்டம் தான் தேசிய சுயம் சேவகர்களை எதிர்க்கின்றது.


Barakat Ali
ஜூலை 23, 2024 07:46

தென்னக மாநிலங்களில் இஸ்லாமியத் தீவிரவாதம் தலையெடுக்கிறது.. அதற்கு இடைஞ்சலாக இருப்பது ஆர் எஸ் எஸ் ..... காரணம் தேசபக்தியை வளர்ப்பதால்.... இயற்கை பேரிடர்களில் களமிறங்கி சேவை நற்பெயர் பெறுவதால் .........


Arachi
ஜூலை 23, 2024 07:08

மதம் வேண்டும் ஆனால் மதத்திற்கு மதம் பிடிக்கக் கூடாது அதுவும் இந்தியா போனற பல மதங்களைச் கொண்ட நாட்டிற்கு.


தாமரை மலர்கிறது
ஜூலை 23, 2024 01:43

ஆர் எஸ் எஸ் இல் ஒரு வருடம் பணிபுரிந்தால் மட்டுமே, அரசு வேலை கொடுக்கப்படவேண்டும்.


சோலை பார்த்தி
ஜூலை 22, 2024 22:24

R.S.S.. . .ஒன்னும். பாகிஸ்தானிய தீவிவாத இயக்கமோ. isis கொலைகார கூட்டமோ இல்லை.. இந்திய மக்களுக்கான இயக்கம்.. இந்தியா முன்னேற உழைக்கும் அமைப்பு.. இங்கு மதம் முக்கியம் இல்லை... ஒன்றுபட்ட இந்தியா தான் முக்கியம்.. ஜெய்ஹிந்த்..வந்தேமாதரம்.. பாரத்மாதா க்கு ஜே


Sundar
ஜூலை 22, 2024 22:22

யார் எங்க வேணும்னாலும் சேரலாம். எதற்கு தடை? அரசியல் கட்சிகளில் கூட சேரலாம்.


ஆரூர் ரங்
ஜூலை 22, 2024 22:19

சீனாக் கம்யூனிஸ்டு கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ள காங்கிரஸ் இங்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருக்கும் போது தேசபக்த ஆர்எஸ்எஸ் இருப்பதில் தவறில்லை .


ஆரூர் ரங்
ஜூலை 22, 2024 22:17

ஆர்எஸ்எஸ் ஒரு சமூக கலாச்சார இயக்கம் மட்டுமே. அது தன்னார்வலர் குழு மட்டுமே. அரசியல் கட்சியல்ல. தேச விரோத ஆட்சிகள் தங்கள் சுயநலத்திற்காக ஆர்எஸ்எஸ் ஐ தீண்டத்தகாத இயக்கம் என கதை பரப்பி விட்டனர். தடை செய்து மகிழ்ந்தனர். ஆனால் இன்று ஆர்எஸ்எஸ் தான் மிகப்பெரிய உள்நாட்டு தன்னார்வ சேவை இயக்கம்.


Svs Yaadum oore
ஜூலை 22, 2024 22:03

அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர விதிக்கப்பட்ட தடையை நீக்கி மத்திய அரசு உத்தரவு ....தடையை நீக்கியதற்கு காங்.,உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனவாம் .....இது பற்றி மதுரை பாராளுமன்றமும் அறிக்கை .....கம்யூனிஸ்ட் கட்சிக்காரன் அரசு ஊழியராக தொழிற் சங்கம் நடத்தறான் ....மதத்தின் பெயரால் கட்சி நடத்தும் சிறுபான்மை அரசு ஊழியராக உள்ளான் ...இவர்கள் இருக்கும்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு என்ன தடை ??.....மதுரையில் ஆயிரம் பிரச்சனை ....அது பற்றி இந்த மதுரைக்காரன் பேசுவது கிடையாது ...வோட்டு போட்ட மக்களை சொல்லணும் ....மதுரை மக்கள் நன்றாக அனுபவிக்கட்டும் ...


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி