உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமராகும் வாய்ப்பை நிராகரித்துவிட்டேன்: உண்மையை போட்டுடைத்த கட்கரி

பிரதமராகும் வாய்ப்பை நிராகரித்துவிட்டேன்: உண்மையை போட்டுடைத்த கட்கரி

நாக்பூர்: என்னை ஒரு அரசியல் தலைவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க விரும்பினார். அந்த வாய்ப்பை ஏற்க நான் மறுத்துவிட்டேன் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியின் போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியது,பிரதமர் பதவிக்காக நான் கனவு கண்டதில்லை. ஆசைப்பட்டதும் இல்லை. ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு வந்தது எனக்கு நினைவிக்கிறது.முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் (அந்த அரசியல் தலைவர் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை) பிரதமர் வேட்பாளர் பதவிக்கு விரும்பினால் என்னை ஆதரிப்பதாக தெரிவித்தார். அந்த வாய்ப்பை ஏற்க மறுத்து நிராகரித்துவிட்டேன். பிரதமர் பதவி எனது லட்சியம் அல்ல. நான் சார்ந்துள்ள அமைப்புக்கு என்றும் நம்பிக்கையாக இருப்பேன். பிரதமர் பதவிக்காக யாரிடமும் சமரசம் செய்ய போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

RAMAKRISHNAN NATESAN
செப் 15, 2024 10:48

நிறைவேறாத ஆசை .......... ஆனா மேடையிலேயே மயக்கம் ....... ஒரு ஸ்வயம் சேவகராக மட்டும் இனி பணிசெய்யுங்கள் ......


Kasimani Baskaran
செப் 15, 2024 06:41

பணக்காரானாலும் கடும் உழைப்பாளி. அந்த உழைப்புக்கு நிச்சயம் அங்கீகாரம் உண்டு. அதையும் அவர் அறிவார். நாடு முழுவதும் சாலைஅமைப்பதில் இணையில்லா ஊக்கத்துடன் செயல்படுபவர்.


Duruvesan
செப் 15, 2024 06:35

சரத் பவர், இண்டி கூட்டணி


முருகன்
செப் 15, 2024 06:15

என்றுமே உன்மையை பேசும் நேர்மையான மனிதர் இவர்


SUBBU,MADURAI
செப் 15, 2024 04:35

இந்தாளு ஒரு கட்டுச் சோத்து பெருச்சாளி அதாவது 2வது சுப்ரமணியசாமி அந்த அரசியல் தலைவர் யார் என்றும் அவர் பெயரையும் சொல்லமாட்டாராம் அப்படியே அந்த ஒரு அரசியல்வாதி சொன்னாலும் இந்த நிதின்கட்கரி பிரதமராகி விட முடியுமா? வயது மூப்பின் காரணமாக பேசிக்கிட்ருக்க மேடையிலே மயங்கி விழும் இவருக்கு இன்னும் பிரதமர் பதவி ஆசை போகவில்லை!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை