உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சொன்னதை செய்வேன்: தேர்தல் தோல்வியால் பதவியை ராஜினாமா செய்த ராஜஸ்தான் அமைச்சர்!

சொன்னதை செய்வேன்: தேர்தல் தோல்வியால் பதவியை ராஜினாமா செய்த ராஜஸ்தான் அமைச்சர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: தான் பிரசாரம் மேற்கொண்ட, 7 தொகுதிகளில் 4ல் பா.ஜ., தோல்வி அடைந்த காரணத்தால், தோல்விக்கு பொறுப்பேற்று ராஜஸ்தான் மாநில வேளாண்மை, தோட்டக்கலை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரோடி லால் மீனா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r11v4uw1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அண்மையில் நடந்த லோக்சபா தேர்தலில், ஏழு லோக்சபா தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் தோல்வி அடைந்தால், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என கிரோடி லால் மீனா கூறியிருந்தார். அவரது சொந்த தொகுதியான தௌசா உட்பட நான்கு தொகுதிகளில் பா.ஜ., தோல்வி அடைந்தது. இதனால் அவர் அதிருப்தி அடைந்தார். தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே, அவர் தனது அமைச்சர் அலுவலகத்திற்கு வராமல் இருந்தார்.தோல்விக்கு பொறுப்பேற்று, இன்று (ஜூலை 04) கிரோடி லால் மீனா (வயது 72), தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை இன்னும் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா ஏற்று கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Palaniappan
ஜூலை 05, 2024 07:42

முதன் முதலில் உண்மையான பெயரை எழுது. பக்கா ஃபிராடு


J.V. Iyer
ஜூலை 04, 2024 17:06

99/543 அய்யா... முதல் ரேங்க்...


Velan Iyengaar
ஜூலை 04, 2024 15:08

முருகன் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் .....


Anantharaman Srinivasan
ஜூலை 04, 2024 14:55

ராஜஸ்தான் அமைச்சர் போல் ராமர் கோயில் திறந்த அயோத்தில் பாஜக தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று மோடி ராஜினாமா செய்ய மாட்டாரா என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது..


Velan Iyengaar
ஜூலை 04, 2024 15:09

ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்க்கிறது


Rama
ஜூலை 05, 2024 05:37

உளறல். அவர் வாக்கு தந்தபடி ராஜினாமா செய்தார்.


Balasubramanian
ஜூலை 04, 2024 14:50

சில பேர் டகா டக் ஒரு லட்சம் என்று சொல்லி 99 வாங்கி ஜெயித்து மக்களுக்கு பட்டை நாமம் சாற்றி விட்டு 99 மார்க் வாங்கிய மாணவன் மாதிரி இனிப்பு வழங்கி கொண்டாடி கொண்டு இருக்கிறார்கள்! இவர் பாவம் தோல்விக்கு பொறுப்பு ஏற்று ராஜினாமா செய்கிறார்


மேலும் செய்திகள்