உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இது தேவையா...? இளம் பெண்ணுக்கு மரண பயம் காட்டிய ‛செல்பி மோகம்

இது தேவையா...? இளம் பெண்ணுக்கு மரண பயம் காட்டிய ‛செல்பி மோகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புனே: பள்ளத்தாக்கில் நின்று கொண்டு ‛செல்பி' எடுக்க முயன்ற பெண் 100 அடி பள்ளத்தில் விழுந்து மீட்கப்பட்ட சம்பவம் மஹாராஷ்ராவில் நடந்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் போர்னே காட் மலைப்பகுதி உள்ளது. இங்கு விடுமுறையையொட்டி பலர் குவிந்தனர். இதில் 26 வயது பெண், பள்ளத்தாக்குப்பகுதி முன் நின்று ‛செல்பி' எடுக்க முயன்றார். அப்போது கால் இடறி 100 ஆழ கிடுகிடு பள்ளத்தில் விழுந்தார். தகவல் அறிந்த உள்ளூர் மீட்பு படையினர் கயிற்றை கட்டி இறங்கி லேசான காயங்களுடன் இளம் பெண்ணை மீட்டனர். இதன் வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.இதே பகுதியில் கடந்த ஜூலை 16-ம் தேதி செல்பி எடுக்க முயன்ற இளம் பெண் ஒருவர் 300 அடி பள்ளத்தில் விழுந்து இறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி