உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சி.பி.ஐ., கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் வழக்கு: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை

சி.பி.ஐ., கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் வழக்கு: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை

புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ., தன்னை கைது செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.டில்லி ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த புதிய மதுபான கொள்ளை வழக்கில் நடந்த முறைகேட்டை அமலாக்கத்துறை, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.இதில் பணமோசடி வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது, சிபிஐ வழக்குப்பதிவு செய்து கடந்த ஜூன் 26-ம் தேதியன்று திகார் சிறையில் வைத்து கெஜ்ரிவாலை கைது செய்தது.தன்னை சிபிஐ கைது செய்தது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கு நாளை (ஆக.14) விசாரணைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தாமரை மலர்கிறது
ஆக 14, 2024 00:08

விசாரணை முடிய இன்னும் குறைந்தது பத்தாண்டுகள் ஆகும்.


Kasimani Baskaran
ஆக 13, 2024 22:13

உச்சநீதிமன்றத்துக்கு நான்கு விதமான வேலைகளுக்கு மட்டுமே நேரம் இருக்கிறது 1 ஜாமீன் கேட்டு வரும் மனுக்களை விசாரிப்பது 2 அமலாக்கத்துறை கைதை எதிர்த்து வழக்கை விசாரிப்பது 3 சிபிஐ கைதை எதிர்த்து வலக்கை விசாரிப்பது 4 பொது நல மனுக்களை விசாரிப்பது . கடைசியில் பழைய வழக்குகளை பைசல் செய்ய நேரமில்லை. நீதிமன்றம் கூட அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ஒரு வருடத்துக்குள் முடிக்கவேண்டும் என்ற சட்டத்தை மதிப்பதில்லை. குற்றவாளிகளை தண்டிக்க முடியாத நீதிமன்றத்தை கலைத்தால்க்கூட தப்பில்லை.


Ramesh Sargam
ஆக 13, 2024 21:08

இப்படியே காலத்தை ஓட்டவேண்டியதுதான்.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ