உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லவ் ஜிஹாத்தில் ஈடுபட்டால் ஆயுள் : அசாமிலும் விரைவில் சட்டம் அமல்

லவ் ஜிஹாத்தில் ஈடுபட்டால் ஆயுள் : அசாமிலும் விரைவில் சட்டம் அமல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கவுஹாத்தி: உ.பி.யை போன்று அசாமிலும் லவ் ஜிகாதியில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் மசோதா விரைவில் கொண்டு வரப்படும் என அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.முஸ்லிம் அல்லாத பெண்களை, இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்யும் நோக்கில் காதலித்து திருமணம் செய்வது, 'லவ் ஜிஹாத்' எனப்படுகிறது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை அளிக்கும் வகையில், சட்டத்திருத்த மசோதாவை, உ.பி.யில் சட்டசபையில் மாநில அரசு அறிமுகப்படுத்தி நிறைவேற்றியது. இந்நிலையில் இன்று (ஆக.,4) நடந்த அசாம் மாநில பா.ஜ. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வஸ் சர்மா பேசுகையில், லவ் ஜிஹாத்தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் சட்ட திருத்த மசோதா விரைவில் கொண்டு வரப்படும். அசாமில் பிறந்தவர்கள் மட்டுமே அரசுப்பணிக்கு தகுதியானவர். குடியுரிமை கொள்கை விரைவில் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Palanisamy T
ஆக 05, 2024 12:54

தமிழகத்திலும் இந்த சட்டம் அவசியம் கொண்டுவர வேண்டும். திமுக அரசு உள்ளவரை இதற்க்கு கொஞ்சமும் சாத்தியமில்லை. அப்படிக் கொண்டு வந்தால் இவர்களுக்கு கிடைக்கும் வாக்கு வங்கி போய்விடும் என்ற அச்சமோ அப்படியென்றால் இவர்களின் கொள்கை தான் என்னவோ?


அப்பாவி
ஆக 05, 2024 11:39

ஆயுள் எதுக்கு?


Kumar Kumzi
ஆக 04, 2024 23:48

மத மாற்றத்தில் ஈடுபடும் லவ் ஜிஹாதிகளை சுட்டுக்கொல்லனும்


S. Narayanan
ஆக 04, 2024 21:47

லவ் ஜிகாத் சட்டம் இந்தியா முழுதும் உடனே அமுல் படுத்துவது மிகவும் அவசரம் மற்றும் அவசியம்


Ramesh Sargam
ஆக 04, 2024 20:36

இந்தியா முழுவதும் இந்த சட்டம் அமலுக்கு வரவேண்டும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை