உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓரிரு நாட்களில் ‛நீட் பி.ஜி தேர்வு தேதி அறிவிப்பு : மத்திய அமைச்சர் தகவல்

ஓரிரு நாட்களில் ‛நீட் பி.ஜி தேர்வு தேதி அறிவிப்பு : மத்திய அமைச்சர் தகவல்

புதுடில்லி: ‛நீட்' - பி.ஜி எனப்படும் முதுகலை மறு தேர்வு தேதி இரு நாட்களில் அறிவிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.மருத்துவ படிப்புகளுக்கான ‛நீட்' யு.ஜி.தேர்வு வினாத்தாள் வெளியானது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நாடு முழுதும் நடந்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து சி.பி.ஐ., வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் ‛நீட்' முதுகலை மருத்துவ படிப்பிற்கான ‛நீட்'- பி.ஜி., தேர்வை என்.பி.இ., எனப்படும் தேசிய தேர்வு வாரியம் நடத்துகிறது. இத்தேர்வை கடந்த 23-ம் தேதியன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஹரியானாவின் பஞ்ச்கோலாவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, ‛நீட்' பி.ஜி. தேர்வு தேதி இன்னும் ஓரி நாட்களில் அறிவிக்கப்படும். மத்திய கல்வித்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய தேர்வு வாரியம் அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்