உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கதேச அகதிகளுக்கு அடைக்கலம்; மம்தா பேச்சுக்கு கிளம்பியது எதிர்ப்பு

வங்கதேச அகதிகளுக்கு அடைக்கலம்; மம்தா பேச்சுக்கு கிளம்பியது எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : 'உள்நாட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேச அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்கப்படும்' என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதற்கு, வங்கதேச அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.நம் அண்டை நாடான வங்கதேசத்தில், அந்நாட்டு விடுதலைப் போரில் பங்கேற்று உயிர் இழந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு கடந்த 16ம் தேதி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2eqv0sw3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது வன்முறையாக மாறியதை அடுத்து வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. சுதந்திர போராட்ட வீரர்கள் இட ஒதுக்கீட்டில் படித்து வரும் மாணவர்கள் தாக்கப்பட்டனர்.மாணவர்கள் - போலீசார் மோதல் உட்பட பல்வேறு இடங்களில் அரங்கேறிய வன்முறை சம்பவங்களில், 197 பேர் பலியாகினர். இதையடுத்து, நாடு முழுதும் இரண்டு மணி நேர தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இட ஒதுக்கீட்டில் மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அங்கு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.இந்நிலையில், வங்கதேச கலவரம் குறித்து சமீபத்தில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 'வங்கதேசத்தில் நடப்பது உள்நாட்டு பிரச்னை. அங்கு ஆதரவின்றி சிரமப்படும் மக்கள் எவரானாலும், மேற்கு வங்க கதவுகளை தட்டும் போது, அவர்களுக்கு நாங்கள் நிச்சயம் அடைக்கலம் அளிப்போம்.'அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கள் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்' என்றார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச வெளியுறவு துறை அமைச்சர் ஹசன் மஹ்மூத், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை வங்கதேச ஊடகங்கள் வெளியிட்டு உள்ளன.அதில், 'நாங்கள் மிகவும் நெருக்கமான உறவை பேணும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, எங்கள் உள்நாட்டு பிரச்னை குறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.'அவரின் இந்த கருத்து மிகவும் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே குழப்பங்களை ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

Rajah
ஜூலை 25, 2024 14:01

குடியேறிகள் நம் நாட்டிற்குள் புகுந்து பிள்ளைகளை அதிகமாகப் பெற்று நாட்டை அழித்து விடுவார்கள் என்று நம் பிரதமர் ஏற்கனவே எச்ரித்து இருந்தார். இப்போதாவது விழித்துக் கொல்லுங்கங்கள்.


Rajah
ஜூலை 25, 2024 13:49

கதவை திறந்து விடுவதா இல்லையா என்ற வெளியுறவுக் கொள்கை சம்பத்தப்பட்ட விடயங்களை முடிவெடுக்க மத்திய அரசுக்கு மட்டுமே உரிமை இருகின்றது. சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக நாட்டையே காட்டிக் கொடுக்கும் இவர்களை திறந்த வெளியில் தூக்கிலிடப்பட வேண்டும்.


Swaminathan L
ஜூலை 25, 2024 13:25

வெளி தேச மக்கள் இந்தியாவுக்குள் குடியேற மாநில அரசு அனுமதி தர முடியாது. அது மத்திய அரசின் நடவடிக்கை. மேற்கு வங்கத்தில் குறிப்பிடத்தக்க அளவு பங்களாதேஷ், மியன்மார் ரோஹிங்க்யாக்கள் உட்புகுதல் பல காலமாக நடந்து வந்துள்ளது. அவர்கள் கட்டுப்பாடான ஓட்டு வங்கியுமாக மாறியிருக்கலாம்.


தமிழ்வேள்
ஜூலை 25, 2024 13:23

இந்திய விரோதிகள், பயங்கரவாதிகளை வெளிநாட்டில் வைத்து போட்டுத்தள்ளும் ரா அமைப்பு, கொஞ்சம் உள்நாட்டிலும் பார்வையை செலுத்துவது நல்லது .


Barakat Ali
ஜூலை 25, 2024 13:12

ஊடுருவல் காரர்கள் மூட்டை முடிச்சுக்களுடன் தயாராக இருங்கள் ..... உங்களை வெளியேற்றுவோம் ..... 2014 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சொன்னது ..... செஞ்சாரா மோடி ????


nv
ஜூலை 25, 2024 12:27

இந்த மாதிரி நாட்டுக்கு கேடு விளைவிக்கும் அரசியல் வாதிகளுக்கு கடுமையாக தண்டனை கொடுக்க அரசியலமைப்பு சட்டம் திருத்தம் செய்யப்படவேண்டும்..


saravan
ஜூலை 25, 2024 12:13

கண்டவர்கள் எல்லாம் வந்து குடியேற இந்தியா என்பது தனி நாடா அல்லது ஆதரவற்றவர்கள் ஆசிரமமா? ஏன் உங்கள் மேற்கு வங்காளத்தில் இருந்து ஒரு 1000 நபர்களுக்கு அமெரிக்காவில் அடைக்கலம் வாங்குங்களேன்? அறிவு சார்ந்தவர்கள் அரசியலில் வேண்டும் என்பதற்கு மம்தா வின் அறிக்கை சிறந்த எடுத்துக்காட்டுக்கு...


M Ramachandran
ஜூலை 25, 2024 12:04

மம்தாவின் வீழ்ச்சி ஆரம்பம். எப்படி வங்காள மாநிலம் கம்யூனிஸ்டுக்கள் பிடியிலிருந்து விடுதலை பெற்றதோ அந்த நிலை மம்முதாவிற்கும். இதைய்ய உணராதா மம்முதா அண்டை அயல் நாட்டு மக்களை ஒட்டு வங்கிகாக திருட்டு குடியேற்றியதோ அது ஹான் அவர் போட்ட பிள்ளையார் சுழி


நிக்கோல்தாம்சன்
ஜூலை 25, 2024 11:57

வடஇந்தியாவிலிருந்து வரும் பல ரயில்களும் இந்த வங்கதேச வந்தேறிகளால் நிரம்பி வழிகிறது, எங்கே போயி முடியப் போகிறதோ இந்த .....


V RAMASWAMY
ஜூலை 25, 2024 11:40

தங்களை மகாராஜா, மகாராணி என்பது போல் நடந்துகொள்ளும் மாநில முதன் மந்திரிகளுக்கு ஒரு அறிவுறுத்தும் விதமாக அறிவுறுத்தல் விடுப்பதோடு, தேவைப்பட்டால், suomotto கேஸ் போட்டு சுப்ரீம் கோர்ட் மூலமாக எச்சரிக்கை விட்டால் தான் அடங்குவார்கள்.


மேலும் செய்திகள்