உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜாமின் கிடைக்குமா ?: சி.பி.ஐ., வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு

ஜாமின் கிடைக்குமா ?: சி.பி.ஐ., வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு

புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ., கைதை எதிர்த்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமின் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்க உள்ளது.டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கையில் நடந்த முறைகேட்டை அமலாக்கத்துறை, சி.பி.ஐ,. விசாரித்து வருகிறது. இதில் நடந்த பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை அவரது வீட்டில் வைத்தே கைது செய்தது. திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இதே வழக்கில் கடந்த ஜூன் மாதம் 26-ம் தேதியன்று சி.பி.ஐ, வழக்குப்பதிவு செய்து திகார் சிறையில் வைத்தே கெஜ்ரிவாலை கைது செய்தது. இரு வழக்குகளும் டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் சி.பி.ஐ. கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான பெஞ்ச் இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கிறது. முன்னதாக அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஏற்கனவே ஜாமின் கிடைத்தது குறிப்பிட்டத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Narayanan
செப் 13, 2024 14:06

நான் கூட அப்படிதான் நினைத்தேன் ஜாமின் கிடைக்காது என்று


ராமகிருஷ்ணன்
செப் 13, 2024 09:04

கைதாவதற்கு முன்பு போர்ஜ்ரி கெஜ்ரிவால் என்னென்ன ஆட்டம் போட்டு வந்தார். இப்ப ஜாமீனுக்கு. ஏன் அலையுது.


Sri
செப் 13, 2024 07:37

கண்டிப்பாக கிடைக்கும் உச்சநீதிமன்றத்தில், சிபிஐ தான் குற்றவாளி கெஜ்ரிவால் அப்பாவி


Sri
செப் 13, 2024 10:57

வெற்றி பண நாயகம்


Kasimani Baskaran
செப் 13, 2024 05:40

ஜாமீன் மட்டுமல்ல - விரால் மீன் கூட கிடைக்காது. சட்டத்தை வில்லாக வளைத்து உடைத்து சம்பாதிக்கமுடியும் என்று திராவிட மாடலுக்கு மாடலாக இருப்பவர். வசமாக அமலாக்கத்துறையிடம் சிக்கியிருக்கிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை