உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நொய்டாவில் ரூ.1 கோடி பறிமுதல்

நொய்டாவில் ரூ.1 கோடி பறிமுதல்

நொய்டா:லோக்சபா தேர்தல் நாடு முழுதும் 7 கட்டங்களாக நடக்கிறது. கடந்த மார்ச் 16ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது.இதையடுத்து, போலீஸ் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பரிசுப் பொருட்கள் மற்றும் கணக்கில் வராத பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்படுகின்றன.தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்த நாளில் இருந்து நேற்று முன் தினம் வரை, நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் ஒரு கோடியே 8 லட்சத்து 81,350 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேலும், பறிமுதல் செய்யப்பட்ட 31 லட்சத்து 44,700 ரூபாய் உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் விடுவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை