உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஸ்- டெம்போ மோதிய விபத்து: உ.பி.,யில் 10 பேர் பரிதாப பலி; 20 பேர் படுகாயம்

பஸ்- டெம்போ மோதிய விபத்து: உ.பி.,யில் 10 பேர் பரிதாப பலி; 20 பேர் படுகாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தரபிரதேசத்தில், பஸ்சும், டெம்போவும் மோதி விபத்துக்குள்ளானதில், 10 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர்.உத்தரபிரதேசம் மாநிலம், புலந்தசாகர் மாவட்டத்தில், நெடுஞ்சாலையில் 22 பேர் டெம்போவில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த பஸ், டெம்போவை முந்தி செல்ல முயன்றது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், டெம்போ மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விசாரணை

பயணித்த 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர். அவர்களை அக்கம் பக்கத்தினர், மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்சை டிரைவர் வேகமாக இயக்கியதே, விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
ஆக 18, 2024 21:08

உ.பி சூப்பரா முன்னேறுகிறது.


m.arunachalam
ஆக 18, 2024 19:53

மக்கள் எப்பொழுதும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அதிக நேரம் வாழ்கிறார்கள் . சுற்று சுழலும் மானப்பயிற்சி குறைவும் காரணங்களாக அமைந்து விடுகிறது . சகல வித விபத்துகள் வன்முறை ஆகிய அனைத்தும் தவிர்க்க முடிகின்ற விஷயம் தான் .


P. VENKATESH RAJA
ஆக 18, 2024 14:19

விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வழிபடுகிறேன்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை