உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 14 வயது சிறுமிக்கு கொடூரம் அசாமில் மக்கள் போராட்டம்

14 வயது சிறுமிக்கு கொடூரம் அசாமில் மக்கள் போராட்டம்

குவஹாத்தி, அசாமில் கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான 14 வயது சிறுமிக்கு நீதி கேட்டு, நேற்று மாநிலம் முழுதும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.வடகிழக்கு மாநிலமான அசாமில் நாகோன் மாவட்டத்தின் டிங் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 14 வயது சிறுமி ஒருவர், டியூஷன் முடிந்து வீட்டிற்கு சைக்கிளில் சென்றார். அப்போது, அடையாளம் தெரியாத மூன்று பேர் அச்சிறுமியை வழிமறித்து, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அங்குள்ள ஏரிக்கரை அருகே வீசிச் சென்றனர். சிறிதுநேரம் கழித்து, அவ்வழியே சென்ற நபர், மயக்க நிலையில் சிறுமியை கண்டு போலீசுக்கு தகவல் அளித்தார். போலீசார், சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமியின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒருவரை கைது செய்துள்ளதாகவும், மற்ற இருவரை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இதற்கிடையே, சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்தை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கக்கோரியும் மாணவர் அமைப்பினர் உட்பட பல்வேறு அமைப்பினரும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு வணிகர்களும் ஆதரவளித்து கடைகளை அடைத்தனர். இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.போராட்டம் தீவிரமடைந்த நிலையில், டிங் பகுதியில் டி.ஜி.பி., சிங் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதற்கிடையே சமூக வலைதளத்தில் அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா வெளியிட்ட அறிக்கையில், 'சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம், மனித குலத்திற்கு எதிரான செயல். குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி, தண்டனை பெற்றுத் தருவோம்' என, கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

naranam
ஆக 24, 2024 11:06

பலாத்கார குற்றங்களுக்கு மூன்று மாதங்களுக்குள் மரண தண்டனை பொது வெளியில் நிறைவேற்றப் படவேண்டும். அப்போது தான் குற்றவாளிகளுக்கு பயம் ஏற்படும்.


சந்திரசேகர்
ஆக 24, 2024 08:20

அது ஒன்றும் பெரிய தவறு இல்லை என்பதால் தான் அரசாங்கம் இன்னும் கற்பழிப்பு குற்றதுக்கு கொடிய தண்டனை சட்டம் நிறைவேற்ற வில்லை. அல்லது நீதிபதிகள் கருணை காட்டுகிறார்கள். மனித உரிமை கமிஷன் என்று ஒன்று உள்ளது. அது மனித நேயம் இல்லாமல் குற்றம் செய்பவர்களுக்கு வக்காலத்து வாங்கும்


Kasimani Baskaran
ஆக 24, 2024 07:02

கேடிகளிடமிருந்து பெண்பிள்ளைகளை பாதுகாப்பது அவ்வளவு எளிதல்ல. பெற்றோர் கவனமாக இருப்பதுதான் நிரந்தர தீர்வு. ஆண்பிள்ளைகளை நல்லொழுக்கத்துடன் வளர்ப்பது நீண்டகால அடிப்படையிலான தீர்வு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை