உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 4 நாளில் 195 கி.மீ., துாரம் எஜமான் வீட்டுக்கு ஓடி வந்த நாய்

4 நாளில் 195 கி.மீ., துாரம் எஜமான் வீட்டுக்கு ஓடி வந்த நாய்

பெலகாவி, : கோவில் திருவிழாவில் காணாமல் போன நாய், 195 கி.மீ., நடந்தே உரிமையாளர் வீட்டுக்கு வந்து சேர்ந்தது.ஆறு அறிவு உள்ள மனிதர்களை விட, ஐந்து அறிவு உள்ள நாய்க்கு நன்றி, விசுவாசம் அதிகம் என்று சொல்வதை நாம் கேள்விப் பட்டிருப்போம். பல இடங்களில் எஜமானர்கள் உயிரை காப்பாற்றி, வளர்ப்பு நாய்கள் உயிரை விட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.இந்நிலையில், திருவிழாவில் காணாமல் போன வளர்ப்பு நாய் 195 கி.மீ., துாரம் ஓடி வந்து உரிமையாளர் வீட்டை அடைந்துள்ளது. பெலகாவி, நிப்பானி யமகர்னி கிராமத்தை சேர்ந்தவர் ஞானதேவ கும்பாரா. இவர் ஒரு நாயை வளர்க்கிறார். அதற்கு மகாராஜா என்று பெயர் வைத்துள்ளார். கடந்த 26ம் தேதி மஹாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் அருகே பந்தர்பூர் கிராமத்தில் நடந்த திருவிழாவிற்கு, ஞானதேவ கும்பாரா குடும்பத்தினருடன் சென்றார். நாயையும் உடன் அழைத்து சென்றார். ஆனால், கூட்ட நெரிசலில், நாய் காணாமல் போனது. தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் ஞானதேவ கும்பாரா குடும்பத்தினர் ஊருக்கு வந்து விட்டனர்.நேற்று காலை, ஞானதேவ கும்பாரா வீட்டின் முன், காணாமல் போன நாய் நின்றது. நாயை பார்த்து ஒரு நிமிடம் அவர் திகைத்து நின்றார்.பந்தர்பூரில் இருந்து நாய் நடந்தே வந்திருப்பது தெரிந்தது. அந்த நாய்க்கு மக்கள் மாலை அணிவித்து கொண்டாடினர். பந்தர்பூரில் இருந்து யமகர்னி கிராமம், 195 கி.மீ., துாரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

JENEFA GOSPEL Ministry
ஜூலை 31, 2024 15:13

எஸ் எல்லா நாய் இனங்களும் மனிதனிடம் நன்கு பழக்கமுள்ளவை நானும் இரண்டு நாய்களை வளர்த்தேன் ஆனால் அவை இறந்து விட்டது எனக்கு ரொம்ப ரொம்ப மனக்கஷ்டம் அழுதுட்டேன்


N.Purushothaman
ஜூலை 31, 2024 08:18

இந்தியர்கள் இயற்கையாகவே விலங்கினங்கள் மீது ஆதீத அன்பும் அக்கறையும் கொண்டவர்கள் ....சமீபகாலமாக இடதுசாரிய சிந்தனைகள் தாக்கத்தால் அதிகம் புலால் உணவு உண்ணும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர் ....அதன் விளைவு தற்போது நாய்,பூனை போன்றவற்றை கூட உண்ணும் போக்கு அதிகரித்து உள்ளது .....


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ