உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.2,100 கோடி மோசடி சத்தீஸ்கரில் இருவர் கைது

ரூ.2,100 கோடி மோசடி சத்தீஸ்கரில் இருவர் கைது

புதுடில்லி, சத்தீஸ்கரில் கடந்த 2019- -- 2022ம் ஆண்டுகளில் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் மதுபானங்களை சட்டவிரோதமாக விற்று, 2,100 கோடி ரூபாய் மோசடி நடந்துஉள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.இது தொடர்பாக மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், மதுபான வர்த்தகர்கள் அரவிந்த் சிங் மற்றும் திரிலோக் சிங் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதை தொடர்ந்து 2022ல் வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. இந்நிலையில், அரவிந்த் சிங் மற்றும் திரிலோக் சிங் தில்லான் ஆகியோரை கடந்த 1ம் தேதி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது: திரிலோக் சிங் தில்லான் தெரிந்தே, மதுபான மோசடி பணத்தை, தன் வங்கி கணக்கில் வரவு வைக்க அனுமதித்து உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ