| ADDED : ஆக 08, 2024 10:18 PM
பெங்களூரு : ''மாநிலத்தில் 25 மினி ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும், என ஜவுளி மற்றும் விவசாய மார்க்கெட் துறை அமைச்சர் சிவானந்த பாட்டீல் தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:மாநிலத்தில் 25 மினி ஜவுளி பூங்கா அமைக்க, திட்டம் வகுத்துள்ளோம். ஜவுளித்துறையில் வேலை வாய்ப்பை அதிகரிக்க, நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கு முன் கிராமப்புறங்களின் லட்சக்கணக்கான மக்களுக்கு, ஜவுளித்துறையில் அதிகமான வேலை வாய்ப்பு இருந்தது. ஆனால் தற்போது குறைந்துள்ளது.மக்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பை உருவாக்குவது அவசியம். ஜவுளிப்பூங்கா உருவாக்கினால், வேலை வாய்ப்பு அதிகரிக்கும். இதை மனதில் கொண்டு, அரசு திட்டம் வகுத்துள்ளது.வங்க தேசத்தில், 30 சதவீதம் ஜவுளி உற்பத்தியானது. தற்போது அங்கு வன்முறை, பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஜவுளி உற்பத்தி சரியும். அதே நேரத்தில் இந்தியாவின் ஜவுளிக்கு டிமாண்ட் அதிகமாகும். இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.