உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே வாரத்தில் 2வது பாலம் "டமால்": பீஹாரில் நடந்த கூத்து

ஒரே வாரத்தில் 2வது பாலம் "டமால்": பீஹாரில் நடந்த கூத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹாரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அராரியா மாவட்டத்தில் பக்ரா ஆற்றின் குறுக்கே குர்சா கண்டா மற்றும் சிக்தி நகரங்களை இணைக்கும் பாலம் இடிந்து விழுந்த நிலையில், இன்று (ஜூன் 22) சிவான் மாவட்டத்தில் ஒரு பாலம் இடிந்து விழுந்தது. பாலத்தின் மீது நடப்பதற்கே, அம்மாநில மக்கள் பீதி அடைகின்றனர். பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அராரியா மாவட்டத்தில் பக்ரா ஆற்றின் குறுக்கே குர்சா கண்டா மற்றும் சிக்தி நகரங்களை இணைக்கும் வகையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மாநில அரசு சார்பில், 12 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டப்பட்டது. விரைவில் இந்த பாலம் திறக்கப்பட இருந்த நிலையில், அந்த பாலம் ஸ்திரத்தன்மை இழந்ததால், சில தினங்களுக்கு முன்பு திடீரென இடிந்து தரைமட்டமானது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eb8c24d0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

2வது பாலம்

இந்நிலையில், இன்று (ஜூன் 22) சிவான் மாவட்டத்தில் படேதா மற்றும் கரவுலி கிராமங்களுக்கு இடையே உள்ள பாலம் இடிந்து விழுந்தது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கால்வாயை கடப்பதற்காக, கட்டப்பட்டுள்ளது. அரசுப் பணிகளில் ஊழல் மலிந்துள்ளதற்கு சாட்சியாக இந்த விபத்து திகழ்கிறது என, எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். பாலத்தின் மீது நடப்பதற்கே, அம்மாநில மக்கள் பீதி அடைகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
ஜூன் 22, 2024 18:48

கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் நீர் செல்லும் ஆற்றுப் பாலங்கள் நாற்பது ஆண்டுகள் உடையாமல் இருந்தால்தான் அதிசயம்.


S Sivakumar
ஜூன் 22, 2024 18:29

எந்த மாநிலமாக இருந்தாலும் ஊழலில் சிக்கிய ஒப்பந்ததாரர்கள் பரிதாப நிலை இது தான்


தமிழ்வேள்
ஜூன் 22, 2024 18:27

நாற்பது வயது பாலம் தொடர்ந்து பராமரிப்பு செய்யப்படாமல் இருந்தால் உடைந்து விடும் வாய்ப்பு அதிகம்.... பீஹார் மாநிலத்தின் நதிகள் வெள்ள பெருக்கு அதிகம் உள்ளவை.. மேலதிக பராமரிப்பு தேவை.. உயிர்ச்சேதம் ஏற்படாத வரை மகிழ்ச்சி..


ramesh
ஜூன் 22, 2024 16:56

பாலத்தின் கால் உடைந்து விட்டது .ஊழலற்ற ஆட்சி நல்ல வேடிக்கை


Velantex Ram
ஜூன் 22, 2024 16:23

கவனிக்கவும் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது ??


ஐராவதம்
ஜூன் 22, 2024 15:09

.கூட்டு வெச்சு கூட்டாக ஜெயிச்சு கூட்டாட்சி நடத்துவதால் தான் காரணம்


Bye Pass
ஜூன் 22, 2024 16:09

பத்து லட்சத்துக்கு ஆசை படாம இருங்க


சமீபத்திய செய்தி