மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
2 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
2 hour(s) ago
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
3 hour(s) ago | 1
சில்சார்: அசாமின் கச்சார் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில், மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இது குறித்து, அசாம் போலீஸ் அதிகாரி கூறியதாவது:அசாமின் கிழக்கு தோலை கங்காநகரில், மூன்று பயங்கரவாதிகளை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ஏ.கே., 47 ரக துப்பாக்கி, ஒரு பிஸ்டல் மற்றும் பிற ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.இந்நிலையில், இந்த பயங்கரவாத கும்பலை சேர்ந்த மற்றவர்களை பிடிக்க, இந்த மூன்று பேருடன், போலீசார் பாபன் மலை பகுதிக்கு சென்றனர்.அப்போது தப்பிக்க முயன்ற பயங்கரவாதிகள், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை சுட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக போலீசாரும் துப்பாக்கி சூடு நடத்தினர். ஒரு மணி நேரம் நீடித்த சண்டையில், மூன்று பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீஸ் தரப்பில் மூன்று பேர் காயம்அடைந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
2 hour(s) ago
2 hour(s) ago
3 hour(s) ago | 1