உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3000 கி.மீ., துாரத்துக்கு கவச்: ரயில்வே அமைச்சகம் அறிக்கை

3000 கி.மீ., துாரத்துக்கு கவச்: ரயில்வே அமைச்சகம் அறிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாடு முழுதும், 3000 கி.மீ., தொலைவிலான ரயில் தடங்களில், 'கவச்' தொழில்நுட்பம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேற்கு வங்கத்தில் நேற்று முன்தினம் நடந்த ரயில் விபத்தை தொடர்ந்து, ரயில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே, ரயில்வே துறையின் ஆர்.டி.எஸ்.ஓ., எனப்படும், ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பு, 'கவச்' என்ற தொழில்நுட்பத்தை 2019ல் உருவாக்கியது.ரயில் ஓட்டுனர்கள் அவசர காலத்தில் ரயிலை நிறுத்தாமல் போனால், எதிர்வரும் ஆபத்தை உணர்ந்து ரயில் தானாகவே நிற்கும்படியான தொழில்நுட்பத்தை, 'கவச்' அளிக்கிறது. இந்த தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் பணிகள் நாடு முழுதும் நடந்து வருகிறது.

இது குறித்து ரயில்வே அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

'கவச்' தொழில்நுட்பத்துக்கு 2019ல் சான்று அளிக்கப்பட்டது. அதன் பின் கொரோனா பரவல் காரணமாக பணியில் சுணக்கம் ஏற்பட்டது.தற்போதைய நிலவரப்படி, 1465 கி.மீ., துார வழித்தடங்கள், 121 ரயில்களில் இந்த தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 3000 கி.மீ., துாரத்திற்கு கவச் தொழில்நுட்பத்தை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.ரயில் தடங்களில் கண்ணாடி வட கம்பிகள், தொலை தொடர்பு கருவிகள் மற்றும் கோபுரங்கள் அமைப்பது, ரயில்வே ஸ்டேஷன்களில் தரவு மையங்கள் அமைப்பது, இறுதியில் ரயில்களில் கருவிளை நிர்மாணிப்பது உட்பட பல்வேறு பணிகள் தொடர்புடையதால் நீண்ட கால அவகாசம் ஆகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, ரயில்வே பாதுகாப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக இருக்கும் நிலையில், அதில் 1.5 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் மீது ரயில்வே அமைச்சகம் பதில் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

subramanian
ஜூன் 19, 2024 10:14

நீண்ட தூரம் பயணம் செய்து பாருங்கள். எத்தனை சிக்னல், எத்தனை கிராஸ்ஸிங், எத்தனை பாலம், எத்தனை மேம்பாலம், எத்தனை கால்வாய், எல்லாவற்றையும் ஆய்வு செய்து வருகின்றனர். பிரமிக்கத்தக்க அளவுக்கு ஊழியர்கள் செயல்பட்டு வருகிறார்கள். குறை சொல்வது சுலபம் .


subramanian
ஜூன் 19, 2024 10:10

செய்து கொண்டு உள்ளது பாராட்டுக்கு உரியது. உலகின் எல்லா நாடுகளிலும் விபத்து நடக்கிறது. இன்னும் அதிக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


P. SRINIVASALU
ஜூன் 19, 2024 09:56

வெத்து அறிக்கை.பொய்ப்பிரச்சாரம்.


Kasimani Baskaran
ஜூன் 19, 2024 06:30

உலகில் மிக நீளமாக இரயில்பாதைகளை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றாலும் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது. புல்லுருவிகள் என்னதான் லீலை செய்தாலும் பாதுகாப்பு உபகரணங்கள் மூலம் விபத்துக்களை தடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி