உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "எதிர்க்கட்சிகளின் நோக்கம் இது தான்": புட்டு புட்டு வைத்த அமித்ஷா

"எதிர்க்கட்சிகளின் நோக்கம் இது தான்": புட்டு புட்டு வைத்த அமித்ஷா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: 'எதிர்க்கட்சிகளின் நோக்கம் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களை முதல்வர் மற்றும் பிரதமர் ஆக்குவது தான்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் நடந்த பேரணியில் அமித்ஷா பேசியதாவது: காஷ்மீர் எங்களுக்கு சொந்தமானது. 2வது முறையாக மோடி பிரதமர் ஆகியதும் 370வது சட்டப்பிரிவை நீக்கி காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றினார். காஷ்மீரில் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வரும் பணியை மோடி செய்தார். உ.பி.யில் இருந்து மக்கள் இடம்பெயர்வதை பா.ஜ., அரசு தடுத்துள்ளது, தற்போது குற்றவாளிகள் இடம்பெயர்கின்றனர்.வரும் தேர்தலில் மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்க வேண்டும். அவர் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக நிறைய பணிகளை செய்துள்ளார். அகிலேஷ் யாதவ் கட்சியும், காங்கிரசும் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஒருபோதும் விரும்பவில்லை. திமிர் பிடித்த இண்டியா கூட்டணியில் உள்ளவர்கள் 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் நோக்கம் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களை முதல்வர் மற்றும் பிரதமர் ஆக்குவது தான். மரணத்திற்குப் பின் இந்தியாவின் மிக உயரிய பாரத ரத்னா விருது பெற்ற சவுத்ரி சரண் சிங், விவசாயிகளின் சாம்பியன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

K.n. Dhasarathan
ஏப் 03, 2024 21:25

அமித் ஷா அவர்களே , இது மிகவும் மிகவும் பழசு உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் யாரும் வரலையா? உங்கள் பையன் எப்படி கிரிக்கெட் போர்டு தலைவர் ஆனார் எந்த ராஞ்சி கோப்பைக்கு ஆடினார் அவருக்கு கிரிக்கெட்டுக்கு என்னசம்பந்தம்


Godfather_Senior
ஏப் 03, 2024 19:31

குடும்பக்கட்சிகளுக்கு சாவு மணி அடித்து சங்கு ஊதும் நாள் ஜூன் நான்காம் தேதி பாவம் சென்னை சர்வாதிகாரிக்கு இப்போ யாரோடு கூட்டு வச்சா இன்னும் பணம் பெறும்னு மட்டும்தான் யோசிக்கிறாரே தவிர இன்னும் எத்தனை நாளுக்குள்ளே கம்பி எண்ணுவதற்கு தயாராகவேண்டும் என யோசிக்கவில்லை எப்படியோ செந்தில் பாலாஜிக்கு கோபாலபுரம் குடும்பமே ஜெயிலில் துணை கொடுக்கும் என நம்புவோம்


Priyan Vadanad
ஏப் 03, 2024 18:39

அடெய்ங்கப்பா புட்டு புட்டுன்னு வெச்சிட்டார் சாப்பிட்டு வயிறு ரொம்பி போச்சுது இன்னும்கொஞ்சம் புட்டு வையுங்க அமித் ஷாவா இருங்க அமித் ஷோவா இருக்கிரீங்க


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை