மேலும் செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்
10 hour(s) ago
காசா பிளாங்காவில் பேஷன் ஷோ
10 hour(s) ago
பிரிட்ஜஸ் லெர்னிங் வித்யாலயாவில் உடல் நல உணவு திருவிழா
10 hour(s) ago
போக்குவரத்தில் சிக்கிய மத்திய அமைச்சர்
10 hour(s) ago
பெங்களூரு : பா.ஜ.,வுக்கு கிடைக்க கூடிய மூன்று எம்.எல்.சி., பதவிகளுக்கு, 40 பிரமுகர்களின் பெயர்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளது.கர்நாடக சட்ட மேலவையில், எம்.எல்.ஏ.,க்களால் தேர்வு செய்யப்படும், 11 எம்.எல்.சி., பதவிகளுக்கு, ஜூன் 13ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 27ம் தேதி துவங்குகிறது. ஒருவர் வெற்றி பெறுவதற்கு, 19 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை. எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், காங்., - 7, பா.ஜ., - 3, ம.ஜ.த., - 1 எம்.எல்.சி., பதவி கிடைக்கும்.இந்நிலையில், வேட்பாளர் தேர்வு குறித்து, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தலைமையில், முக்கிய தலைவர்கள் கூட்டம், பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.மத்திய பார்லிமென்ட் விவகார துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, சதானந்தகவுடா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், முன்னாள் துணை முதல்வர்கள் கோவிந்த் கார்ஜோள், அஸ்வத் நாராயணா, முன்னாள் அமைச்சர் சி.டி.ரவி, முன்னாள் துணை தலைவர் நிர்மல் குமார் சுரானா, மாநில அமைப்பு பொதுச்செயலர் ராஜேஷ் ஆகியோர் மட்டுமே பங்கேற்றனர்.யாரை வேட்பாளராக தேர்வு செய்யலாம் என்று, இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடந்தது.கூட்டத்துக்கு பின், சி.டி.ரவி கூறியதாவது:பா.ஜ.,வுக்கு கிடைக்க கூடிய மூன்று எம்.எல்.சி., பதவிகளுக்கு, 40 பிரமுகர்களின் பெயர்கள் ஆலோசிக்கப்பட்டது. வேட்பாளர் தேர்வு குறித்த இறுதி முடிவை எடுக்க, மாநில தலைவருக்கும், அமைப்பு பொதுச்செயலருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.அவர்கள், தேசிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்வார்கள். இத்துடன், மேலவையின், ஆசிரியர், பட்டதாரி தொகுதிகளின் தேர்தல் வெற்றி வியூகம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago