| ADDED : மார் 28, 2024 10:39 PM
பெங்களூரு : லோக்சபா தேர்தலுக்கு, கட்சிகளின் வேட்பாளர்கள், காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு பிரசாரம் செய்கின்றனர். லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனுவுடன் 25,000 ரூபாய் டிபாசிட் செலுத்த வேண்டும். எஸ்.சி., சமுதாய வேட்பாளர்கள், 12,500 ரூபாய் டிபாசிட் செலுத்த வேண்டும். வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பதிவாகும் மொத்த ஓட்டுகளில், ஆறில், ஒரு சதவீதம் ஓட்டுகளை பெற்றால், அவர்களின் டிபாசிட் தொகையை, தேர்தல் அதிகாரிகள் திருப்பி தருவர்.அதற்கும் குறைவான ஓட்டுகள் பெற்றால், டிபாசிட் தொகையை இழப்பர். 2019 லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில், 478 வேட்பாளர் போட்டியிட்டனர். இவர்களில், 422 பேர் டிபாசிட் இழந்தனர்.