உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 5 திருமணம்... 49 பெண்களுடன் காதல்; பலே ஆசாமியை பிடிக்க போலீசார் நடத்திய திருமண நாடகம்

5 திருமணம்... 49 பெண்களுடன் காதல்; பலே ஆசாமியை பிடிக்க போலீசார் நடத்திய திருமண நாடகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: ஒடிசாவில் பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி பணம், கார் உள்ளிட்டவற்றை பெற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்த பலே ஆசாமியை போலீசார் ஸ்கெட்ச் போட்டு கைது செய்தனர்.

திருமண நாடகம்

ஒடிசாவைச் சேர்ந்த சத்யஜித் மனகோவிந்த் சமால்,34, என்பவர் மேட்ரிமோனி இணையதளத்தில் வரன் தேடும் பெண்களைக் குறிவைத்து, திருமணம் செய்து ஏமாற்றி வந்துள்ளார். இதுவரையில் 5 பெண்களை திருமணம் செய்தும், 49 பெண்களை காதலித்து ஏமாற்றியும், அவர்களிடம் இருந்து பணம் மற்றும் ஆடம்பரப் பொருட்களை சுருட்டி வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களில் இருவர், தங்களை திருமணம் செய்வதாகக் கூறி ரூ.45 லட்சம் வரையில் மோசடி செய்து விட்டதாக போலீஸில் புகார் அளித்தனர்.

போலீஸார் ஸ்கெட்ச்

அதன்பேரில், பெண்களை ஏமாற்றி மன்மதனாக வலம் வந்த சமாலை கைது செய்ய புவனேஸ்வர் போலீசார் ஒரு திட்டம் போட்டனர். பெண் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு மணமகன் தேவைப்படுவதாக மேட்ரிமோனி இணையதளத்தில் விளம்பரம் கொடுத்தனர்.

துபாய் கனவு

இதனைப் பார்த்த சலாம், அவரை திருமணம் செய்ய விருப்பம் இருப்பதாகக் கூறி அணுகியுள்ளார். அப்போது, அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், நடத்திய விசாரணையில், பெண் இன்ஸ்பெக்டரை திருமணம் செய்து ஏமாற்றி விட்டு, துபாயிக்கு சென்று செட்டில் ஆகி விட இருந்ததாக சலாம் கூறியுள்ளார்.

ரொக்கம் பறிமுதல்

இது குறித்து புவனேஸ்வர் போலீஸ் கூறியதாவது: மேட்ரிமோனி இணையதளத்தில், 2வது திருமணத்திற்காக வரன் தேடும் கணவனை இழந்த பெண்களை குறி வைத்து சமால் தனது சதித்திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளார். அவர்களை பேச்சால் மயக்கி, பணம் மற்றும் கார், பைக் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களைப் பெற்று ஏமாற்றியுள்ளார். கைது செய்யப்பட்ட போது, சமாலிடம் இருந்து ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளோம்,' எனக் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

KarthiJV
ஆக 04, 2024 14:25

1000 குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்க பட கூடாது. இவன் குற்றம் நிருபிக்கப்பட்டால் சுமார் 1000 ரூபாய் முதல் 2 நாள் கடும்காவல் தண்டனை விதிக்க வேண்டும்.


duruvasar
ஆக 04, 2024 13:29

திராவிட பாரம்பரியத்தில் நாட்டமுடைய நபராக தெரிகிறார். டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் இது உறுதியாகிவிடும்.


S. Narayanan
ஆக 04, 2024 13:25

இவன் அரசியல் வாதிகள் உதவியுடன் தான் இப்படி செய்து இருக்க முடியும். பிடி பட்டவுடன் மற்றவர்கள் எஸ்கேப் ஆகி இருப்பார்கள்


sridhar
ஆக 04, 2024 13:25

பெயரை பார்த்தல் சந்தேகம் வருகிறது…. அவனோ


Ramesh Sargam
ஆக 04, 2024 13:15

நமது நீதிமன்றங்களில் கொலைக்குற்றம் செய்தவனுக்கே ஆயுள் தண்டனை அல்லது ஒரு சில ஆண்டு சிறைவாச தண்டனைதான். இவன் செய்த குற்றத்திற்கு அப்படி ஒன்றும் பெரியதாக தண்டனை கிடைக்கப்போவதில்லை. ஓரிரு ஆண்டுகளில் தண்டனை அனுபவித்து, வெளியில் வந்து மீண்டும் தன்னுடைய மன்மதலீலையை ஆரம்பிப்பான்.


God Yes
ஆக 04, 2024 11:09

குடுத்து வச்சவன்


Barakat Ali
ஆக 04, 2024 11:31

அவனுக்கு உடம்புல மச்சம் ன்னு சொல்ல முடியாது ....... மச்சத்துலதான் உடம்பே ......


தமிழ் மைந்தன்
ஆக 04, 2024 10:22

இவர் திமுகவின் ஒரிசா செயலாளராக


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை