உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கார் மீது கவிழ்ந்த கன்டெய்னர் லாரி: வாந்தி யால் உயிர் தப்பிய 5 பேர்

கார் மீது கவிழ்ந்த கன்டெய்னர் லாரி: வாந்தி யால் உயிர் தப்பிய 5 பேர்

தட்சிண கன்னடா: தாவணகெரேயை சேர்ந்தவர்கள் கணேஷ், சிவன், காவ்யா, தன்டியம்மா, ஓட்டுனர் அப்துல் ரஹ்மான் ஆகியோர், 9ம் தேதி தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலா சென்று சுவாமி தரிசனம் செய்தனர். அதன்பின், நேற்று முன்தினம் குக்கே சுப்பிரமணியாவுக்கு தேசிய நெடுஞ்சாலை 75ல் உள்ள ஷிராடி கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தனர்.பார்சினஹள்ளா என்ற இடத்தில் வந்த போது, காரில் பயணித்த காவ்யா, காரிலேயே வாந்தி எடுத்தார். இதனால் காரில் இருந்த அனைவரும் கீழே இறங்கி, ஓரமாக நின்றிருந்தனர்.காரில் இருந்த ஓட்டுனர் அப்துல் ரஹ்மானும், சிறுநீர் கழிக்க சிறிது துாரம் நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த கன்டெய்னர் லாரி, கார் மீது சாய்ந்தது. இதில் கார் அப்பளம் போன்று நொறுங்கியது.இதை பார்த்த நால்வரும் அதிர்ச்சி அடைந்தனர். அப்பகுதியினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அவர்கள், லாரியை கிரேன் மூலம் அகற்றினர். காரில் இருந்து இறங்கியதால், ஐவரும் உயிர் தப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Arun Pradeep
ஆக 16, 2024 12:31

வாந்தி எடுக்காமல் இருந்திருந்தால் கார் நிறுத்தப்படாமலே சென்றிருக்கும். விபத்தே நடந்திருக்காதே வாந்தியால் அப்பளம் போல் நொறுங்கிய கார் என்று வேண்டுமானால் சொல்லலாம் .


karthik
ஆக 17, 2024 09:44

பேசுவது எப்படி வேணும்னாலும் பேசலாம் காசா பணமா..


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை