மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
6 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
6 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
6 hour(s) ago
புதுடில்லி:டில்லி விமான நிலையத்தில் 5.45 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தியதாக இரண்டு சீனர்கள் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக சுங்கத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை ஹாங்காங்கில் இருந்து டில்லி வந்த பயணியரில் சந்தேகத்திற்கிடமான நான்கு பேர் தடுத்து நிறுத்தி தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.நான்கு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் மூன்று பெண்களும் அடங்குவர். இவர்களிடம் இருந்து 5.45 கோடி ரூபாய் மதிப்பிலான 8.2 கிலோ தங்கத்தை சுங்கத்துறை பறிமுதல் செய்தது. இவர்களில் இருவர் சீன நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள்.வெளிநாட்டில் இருந்து தங்கத்தை கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டதால், நான்கு பயணியரும் கைது செய்யப்பட்டனர்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 hour(s) ago | 1
6 hour(s) ago
6 hour(s) ago