| ADDED : மே 01, 2024 08:21 AM
தேவனஹள்ளி : சிங்கப்பூரில் இருந்து பெங்களூருக்கு, விமானத்தில் கடத்தி வரப்பட்ட 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான, தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.பெங்களூரு, தேவனஹள்ளியில் உள்ள, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு, நேற்று முன்தினம் இரவு, சிங்கப்பூரில் இருந்து வந்த விமானம் தரையிறங்கியது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்பட்டதாக கிடைத்த தகவலின்படி, அதில் வந்த பயணியரை, சுங்க அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர்.ஒரு பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, எதுவும் சிக்கவில்லை.அவரை தனியாக அழைத்துச் சென்று, சோதனை நடத்தப்பட்டது. உள்ளாடைக்குள் அவர் மறைத்து வைத்திருந்த தங்கக்கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு 55 லட்சம் ரூபாய். அந்த பயணி கைது செய்யப்பட்டார். ஆனால் அவரது பெயர், விபரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.