உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 48 மணி நேரத்தில் 57 செ.மீ., மழை; நிலச்சரிவுக்கு காரணம் இதுதான்!

48 மணி நேரத்தில் 57 செ.மீ., மழை; நிலச்சரிவுக்கு காரணம் இதுதான்!

திருவனந்தபுரம்: வயநாடு முண்டக்கையில், 48 மணி நேரத்தில் 57 செ.மீ., மழை கொட்டியதுதான், நிலச்சரிவுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.கேரளா மாநிலம் வயநாட்டில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, மண்ணில் புதையுண்டு 168 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரை காணவில்லை. இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கு, அங்கு பெய்த கனமழை தான் காரணம். கடந்த 48 மணி நேரத்தில், முண்டக்கையில் மட்டும் 57 செ.மீ., மழை பெய்துள்ளது. முதல் நாள் 20 செ.மீ., மழையும், மறுநாள் 37 செ.மீ., மழையும் பெய்துள்ளது. இந்த மழைநீர், செம்மண் அடுக்குகளில் புகுந்து மண்ணை குழையச்செய்தது தான் நிலச்சரிவுக்கு காரணம் என்று கேரளா அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

RGK
ஜூலை 31, 2024 16:20

டிசம்பர் ரெண்டாம் நாள் 2015 ல் 50 சென்டிமீட்டர் சென்னையில் பெய்தது . மேட்டர் அதுவல்ல .. தண்ணீர் வழித்தடத்தில் வீடுகளே காரணம்


vbs manian
ஜூலை 31, 2024 15:41

அங்கு ஒரு எம் பி இருக்கிறார். ஏதாவது .........


Ramaswamy Jayaraman
ஜூலை 31, 2024 15:04

மிக அதிகமான அளவில் மலைகள் குடையப்படுகின்றன, கல் குவாரிகள் அதிகமாகின்றன. மரங்களின் அழிவு அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறது. இயற்ககைக்கு எதிராக மனிதன் செயல்படும் போது இந்த மாதிரி இயற்கை சீற்றங்கள் ஏற்படும். ஒரு நிலை வரும்பொழுது, இயற்கையால் மனிதனை பாதுகாக்க முடியாது. அந்த நிலை வந்தால் நாடு பாலைவனமாகும் அந்த நாள் விரைவில் வரும். இது ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் பொருந்தும்.


Godyes
ஜூலை 31, 2024 13:38

மலை மேல் கட்டிய வீடுகள் மழை மேக ஓட்டத்தில் காற்றால் திசை மாறி பெய்திருக்கும்


vbs manian
ஜூலை 31, 2024 12:14

கேரளா நண்பர் சொன்னது. வயநாட்டிலும் நிறைய வீரப்பண்கள் உள்ளனர். தேக்கு மற்றும் வில உயர்ந்த மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுகின்றன. மழை வெள்ளம் நிலச்சரிவை தடுத்து நிறுத்தும் பசுமை கேடயம் தேய்ந்து கட்டாந்தரையாய் ஆகிவிட்டது. பெருமழையில் நீர் மண் அடுக்குகளை பெயர்த்து கொண்டு பெரும் சேதம் ஆகிவிட்டது. வனத்துறை இங்கும் தூங்குகிறது.


Ramesh Sargam
ஜூலை 31, 2024 11:47

48 மணி நேரத்தில் 57 செ.மீ., மழை கொட்டியது ஒரு காரணமாக இருந்தாலும், மேலும் பல காரணங்கள் உள்ளன. முதலில் இயற்கையின் சீற்றம், கோபம் என்றும் வைத்துக்கொள்ளலாம். அது ஏன் கேரளாவில் மட்டும்? கூறுகிறேன் காரணங்களை: 1• வெடி வெடித்து வாய் சிதறிய யானையின் சாபமா? 2• பொம்பளைகளை போலீஸ் துணையுடன் சபரிமலை ஏற்றிய சாபமா? 3• அட்டப்பாடி ஆதிவாசி மதுவின் சாபமா? 4• ஒரு காலத்தில் கேரளா வைனவர்கள், சைவர்கள் வாழ்ந்த ஸ்தலம். மாநிலம் முழுக்க ஹிந்து கோவில்கள். எங்கும் ஹிந்து வழிபாடு, என்றிருந்த புனித மாநிலத்தை, இந்த கம்யூனிஸ்ட்ஸ் என்னும் அயோக்கியர்கள் அழித்ததுதான் மிக மிக முக்கிய காரணம். கணிதமும் இயற்பியலிலும் இதற்கான விடையில்லை ஆனா ஆன்மீகம் விடை சொல்லும் ஆம் எல்லா வினைக்கும் எதிர்வினை நிச்சயமா உண்டு என ஆன்மீகம் ஆணித்தரமாக சொல்லும் For Every Action, There is an Equal and Opposite Reaction


rasaa
ஜூலை 31, 2024 13:02

முற்றிலும் உண்மை.அமைதி மார்க்கமும், கிரிப்டோவும் செய்த அநியாயங்களுக்கு பதில் வினை.


RGK
ஜூலை 31, 2024 16:22

முழு உண்மை கொஞ்ச நஞ்சமா மாட்டை வெட்டி தின்கிறார்கள்


Rajagopalan Narasimhan
ஜூலை 31, 2024 17:50

excellent


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை