உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாபா மேலாளரை சுட்ட 6 பேர் கைது

தாபா மேலாளரை சுட்ட 6 பேர் கைது

குருகிராம்:ஹரியானா மாநிலம் குருகிராம் சோஹ்னா சாலையில் உள்ள ஸ்ரீராம் தாபாவில் நேற்று முன் தினம் இரவு இளைஞர்கள் கூட்டமாக சாப்பிட வந்தனர்.உணவு கொண்டு வருவதற்கு முன் அந்த இளைஞர்கள் சிகரெட் புகைத்தனர். தாபா மேலாளர் சிகரெட்டை அணைக்குமாறு கூறினார். ஆனால், இளைஞர்கள் வாக்குவாதம் செய்தனர். அதில் ஒரு இளைஞர் திடீரென துப்பாக்கியை எடுத்து மேலாளரை சுட்டர்.தகவல் அறிந்து பாட்ஷாபூர் விரைந்து வந்தனர். காயம் அடைந்த மேலாளர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.வழக்குப் பதிவு செய்த போலீசார், கவுரவ், அங்கித், மோஹித், மயங்க் என்ற மோனு, நிதின் மற்றும் ரோஹித் ஆகிய 6 பேரை நேற்று கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை