உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் அரசு வேலை, கல்வியில் 65% இடஒதுக்கீடு: ரத்து செய்தது பாட்னா ஐகோர்ட்

பீஹாரில் அரசு வேலை, கல்வியில் 65% இடஒதுக்கீடு: ரத்து செய்தது பாட்னா ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பீஹாரில் அரசு வேலை, கல்வியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், எஸ்.சி., மற்றும் எஸ்டிகளுக்கான இடஒதுக்கீட்டை 50% இருந்து 65%ஆக உயர்த்தி இயற்றப்பட்ட சட்டத்தை பாட்னா ஐகோர்ட் ரத்து செய்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cor8sumv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் சமீபத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடந்தது. இது சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அரசு வேலை மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்கும் அளவை உயர்த்த மாநில அரசு முடிவு செய்தது. இதற்கு, மாநில அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.அரசு வேலை, கல்வியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், எஸ்.சி., மற்றும் எஸ்டிகளுக்கான இடஒதுக்கீட்டை 50% இருந்து 65%ஆக உயர்த்தி சட்டம் இயற்றப்பட்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 43 சதவீதமும், தாழ்த்தப்பட்டோருக்கு 20 சதவீதமும், பழங்குடியினருக்கு 2 சதவீதமும் அதிகரித்து சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனை எதிர்த்து பாட்னா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு இன்று(ஜூன் 20) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வேலை, கல்வியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், எஸ்.சி., மற்றும் எஸ்டிகளுக்கான இடஒதுக்கீட்டை 50% இருந்து 65%ஆக உயர்த்தி இயற்றப்பட்ட சட்டத்தை பாட்னா ஐகோர்ட் ரத்து செய்தது. அரசியல் சாசனம் வழங்கிய சம உரிமையை இந்த சட்டம் வழங்கவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Vathsan
ஜூன் 20, 2024 19:16

EWS is nothing but Forward Cast Reservation.


Jagan (Proud Sangi)
ஜூன் 20, 2024 18:38

தமிழ் நாட்டில் 69 % எம்ஜியாரால் கொண்டு வரப்பட்டது. முற்படுத்த பட்டவர்களுக்கு அது வரப்ரஸதமாக மாறியது. 1990களில் தமிழ் முற்படுத்த பட்டவர்கள் IT கம்ப்யூட்டர் படித்து இப்போ உலகையே ஆள்கிறார்கள். அரசு வேலை இடஒதுக்கீடு இருக்கட்டும், யாருக்கு வேண்டும் இந்த லஞ்சம் வாங்கும் வேலை .


Vathsan
ஜூன் 20, 2024 15:49

உயர் ஜாதியினர் 10% இட ஒதுக்கீடு உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா யுவர் ஆனர்.


kirupanantham kanthimathinathan
ஜூன் 20, 2024 16:42

thats for poor only. give 100% to poor only


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 20, 2024 16:52

அந்த 10% வறுமையில் இருப்பவர்களுக்கு. அது உன் கண்ணுக்கு தெரியவில்லையா?பல கோடி சொத்துக்களுக்கு அதிபதியான 2 ஜி ராஜா, கார்கே ஆகியோர் வீட்டு பிள்ளைகளுக்கு எதற்கு இட ஒதுக்கீடு ?


rsudarsan lic
ஜூன் 20, 2024 17:01

பொருளாதார அடிப்படையில் என்று தெரியுமா? இனி வரும் நாட் களில் இது மட்டுமே இருக்கப்போகிறது


Duruvesan
ஜூன் 20, 2024 17:20

மூர்க்ஸ் உனக்கு எரியுதா? முரசொலி மூளை அது EBW, ஜமாத் டிகிரி உனக்கு புரியாது விடு


ஆரூர் ரங்
ஜூன் 20, 2024 18:39

வறுமையை ஒழிப்போம் எனக்கூறி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. அது சாதியை ஒழிக்க உறுதி கூறுமா? எல்லா சாதிகளிலும் வறுமையில் வாடுகிறவர்கள் உண்டு. இப்போது வறுமை மட்டுமே கல்வி பெறத் தடையாக உள்ளது.


Vathsan
ஜூன் 20, 2024 19:15

மத்திய அரசு குள்ளநரித்தனமா EWS அதாவது பொருளாதாரத்தில் நலிவடைந்த என்று சொல்லி உயர்ஜாதியினருக்கு வழங்கும் இட ஒதுக்கீடுதான் EWS. அது சரி 8 லட்சம் சம்பளம் வாங்குறவன் எப்படி நலிவடைந்தவன். அப்படியே ஒரு வாதத்துக்கு எடுத்துக்கொண்டால் கூட 8 லட்சம் சம்பளம் வாங்குறவனை நலிவடைந்தவன்னு சொல்லி வருமானம் 8 லட்சத்துக்கு வரி விலக்கு கொடுக்க மத்திய அரசை சொல்லு பார்ப்போம் .


Vathsan
ஜூன் 20, 2024 19:17

ஒன்னு இட ஒதுக்கீட்டை எதிர்த்து பேசுனா EWS ம் வேண்டாம்னு சொல்லு. இல்லைனா வாய மூடிட்டு இரு. 2.5% ஆள்களுக்கு 10%க்கு இட இடஒதுக்கீடு. 60% இருக்க OBCkku 22% ஒதுக்கீடு கொடுத்தா எரியுது. கொஞ்சமாவது மனசாட்சியோடு பேசுங்க. EWS cutoff மார்க் ஓபிசி மார்க்கை விட கீழ தான் இருக்கு. ஓபிசி cutoff almost on par with OC cutoff


எஸ் எஸ்
ஜூன் 20, 2024 14:42

தமிழ் நாட்டில் மட்டும் ஏன் 69% இட ஒதுக்கீடு தந்து முற்பட்ட சமூக மக்களை அரசு வேலைகளில் சேர விடாமல் தடுக்கிறார்கள்? பத்து சதவீத EWS ஒதுக்கீடும் தரவில்லை


ஆரூர் ரங்
ஜூன் 20, 2024 14:26

அடுத்து இங்குள்ள 69 க்கும் வேட்டு. வன்கொடுமை, ஆணவக்கொலையில் ஈடுபடும் சாதியினர் இடஒதுக்கீட்டை அதிகம் அனுபவிப்பது அநியாயம். பரம்பரைப் பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகளும் இடஒதுக்கீடு பெறுவது அபத்தம்.


Anbuselvan
ஜூன் 20, 2024 14:19

தமிழகத்தில் 69% சதவிகிதம் இட ஒதுக்கீடு இருக்கும் போது பீகாரில் ஏன் 65% சதவிகிதம் இருக்க கூடாது? சட்டம் மாநிலத்துக்கு மாநிலம் வேறு படலாமா?


GMM
ஜூன் 20, 2024 13:45

சரியான தீர்ப்பு. பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் ஒரே சாதி கிடையாது. திருமணம் செய்வது இல்லை. இந்த முறை இட ஒதுக்கீட்டில் வாக்கு அதிகம் உள்ள சாதியினர் அரசியல், கல்வி, வேலையில் அதிகம் பயன்பெற்று வருகின்றனர். இம்முறை அரசியலுக்கு உதவும். சாதி, சமூக வளர்ச்சிக்கு உதவாது. திராவிட கூட்டம் தவறான சட்டத்தை அதி விரைவில் அமுல்படுத்தும். மெட்ராஸ் உயர் நீதிமன்றம் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.


Barakat Ali
ஜூன் 20, 2024 13:31

விசாரித்து தீர்ப்பு வழங்கியது, பட்னா உயர்நீதிமன்றம் என்றாலும், தமிழகம் விதிவிலக்கு .......


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை