மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
2 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
2 hour(s) ago
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
4 hour(s) ago | 1
பெங்களூரு: ''நான் யாரையும் ஏமாற்றி, நிலம் வாங்கவில்லை. ஆனால், தலித்துகளுக்கு சொந்தமான, 68 ஏக்கர் நிலத்தை, துணை முதல்வர் சிவகுமார் அபகரித்துள்ளார்,'' என, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி திடுக் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.பா.ஜ., - ம.ஜ.த., இணைந்து நடத்தி வரும், 'மைசூரு சலோ' இரண்டாம் நாள் பாதயாத்திரையை, ராம்நகர் மாவட்டம், பிடதியில் மத்திய அமைச்சர் குமாரசாமி நேற்று துவக்கி வைத்தார்.அப்போது, அவர் பேசியதாவது:நான் திரைப்பட வினியோகஸ்தராக இருந்த போது, கேதகானஹள்ளியில் நிலம் வாங்கினேன். யாரையும் மோசடி செய்து, நிலம் வாங்கவில்லை. நான் மோசடி செய்து நிலம் வாங்கியதாக நிரூபித்தால், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன். 'போர்ஜரி'
நான் தேர்தலில் போட்டியிடுவதற்கு, 15 ஆண்டுகளுக்கு முன்பே 45 ஏக்கர் நிலம் வாங்கினேன். இதை நான் எப்போதும் மூடி மறைக்கவில்லை. ஆனால், தலித்துகளுக்கு சேர வேண்டிய 68 ஏக்கர் நிலத்தை, துணை முதல்வர் சிவகுமார் அபகரித்துள்ளார். தலித்துகளுக்கு கிடைக்க வேண்டிய மனைகளை, 'போர்ஜரி' செய்து சிவகுமார் பறித்து கொண்டார்.இப்படிப்பட்டவரிடம் பாடம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இளம்பெண்ணை கடத்தி சென்று, அவரது தந்தையை மிரட்டி சதாசிவ நகரில் வீட்டு மனையை எழுதி வாங்கினார். என்னை பற்றிய விஷயங்களை அவிழ்த்து விடுவதாக கூறுகிறார். அவிழ்த்து விடட்டும் பார்க்கலாம். நான் நிற்பது வீதியில். சிவகுமார் இருப்பது கண்ணாடி வீட்டில். அவரை பற்றி அவிழ்த்து விட, என்னிடம் ஏராளமான விஷயங்கள் உள்ளன. அமலாக்கத்துறை
சதாசிவ நகரில் மூன்று விதவைகளை மிரட்டி, அவர்களுக்கு சொந்தமான நிலத்தை, தன் மகள் பெயருக்கு சிவகுமார் எழுதி வாங்கினார். இதை பற்றி விசாரிக்க, ஒரு சி.பி.ஐ., ஒரு அமலாக்கத்துறை போதாது. விசாரிக்க 10 சி.பி.ஐ., குழுக்கள் வர வேண்டியிருக்கும். இவரும், ராம்நகர் எம்.எல்.ஏ.,வும், கோடிஹள்ளியில் சட்டவிரோதமாக பாறையை உடைத்து, ஏற்றுமதி செய்தனர். கனகபுராவில் எத்தனையோ குடும்பங்களை சிவகுமார் பாழாக்கினார்.அஜ்ஜய்யன சுவாமி மீது சிவகுமாருக்கு உண்மையான பக்தி, கவுரவம் இருந்தால், நேர்மையான முறையில் வளர்ந்ததாக, சத்தியம் செய்யட்டும். நானும் சத்தியம் செய்கிறேன். இவருக்கு அஜ்ஜய்யன சுவாமியின் சாபம் பலிக்க துவங்கியுள்ளது. சிவகுமார் எத்தனை வீடுகளை நாசமாக்கி, மேலே வந்தவர் என்பது தெரியும். நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. மக்களின் ஆசிர்வாதமே என் பலம். அதே சக்தி என்னை வளர்த்துள்ளது.முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கும் நான் துரோகம் செய்யவில்லை. அந்த சந்தர்ப்பத்தில் கட்டாய காரணங்களால், ஆட்சியை அவரிடம் ஒப்படைக்க முடியவில்லை. இப்போது பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி, காங்கிரசின் துாக்கத்தை கெடுத்துள்ளது. மீண்டும் பதவிக்கு வரும் ஆசை எனக்கு இல்லை. ஏற்கனவே இரண்டு முறை முதல்வராக இருந்துள்ளேன்.ஆனால், மாநிலத்துக்கு நல்லது நடக்க வேண்டும். நான் பதவி கேட்டு காங்கிரசிடம் செல்லவில்லை. அவர்களாகவே மன்றாடி என்னை முதல்வராக்கினர்.எம்.பி., டாக்டர் மஞ்சுநாத், டாக்டராக மட்டும் பணியாற்றவில்லை. அவர் உடலிலும் அரசியல் ரத்தம் ஓடுகிறது. அவரை பற்றியும் சிவகுமார், தரக்குறைவாக பேசியுள்ளார்.காழ்ப்புணர்ச்சியால் நாங்கள் பாதயாத்திரை நடத்தவில்லை. காங்கிரஸ் அரசு அமைந்த முதல் நாளன்றே, கடை கதவை திறந்து வைத்து கொண்டு வசூலுக்கு அமர்ந்துள்ளது. வாக்குறுதி
வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தியதால், மாநிலத்தில் மாற்றம் கொண்டு வந்ததாக கூறிக்கொள்கின்றனர். ஆனால் இந்த திட்டங்களால், மாநிலத்தை தரித்திரத்தில் தள்ளி விட்டனர். ஊழல் செய்வதில் அமைச்சர்களுக்கு இடையே போட்டி எழுந்துள்ளது.பா.ஜ., அரசில் முறைகேடு நடந்ததாக குற்றஞ்சாட்டும் காங்கிரசாரால், ஒரே ஒரு ஆவணத்தையும் கொடுக்க முடியவில்லை. எங்கள் எம்.எல்.ஏ.,க்கள், காங்கிரசாரின் முறைகேடுகள் குறித்து ஆதாரங்களுடன் பேசுகின்றனர். மைசூரு மாவட்ட பொறுப்பை முதல்வர் சித்தராமையா, தன்னிடமே வைத்துள்ளார். தன் மனைவி பெயரில், 14 மனைகள் பெற நாங்கள் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. ஆனால் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, போலி ஆவணங்களை உருவாக்கி, சட்டவிரோதமாக வீட்டுமனைகள் பெற்றுள்ளார்.அரசு சொத்துகளை, முதல்வர் சித்தராமையா அபகரித்துள்ளார். இதற்கான ஆதாரங்களை சட்டசபையில் சமர்ப்பித்தோம். ஆனால் இதற்கு பதிலளிக்காமல், காங்கிரசார் நழுவினர். எங்களுக்கும் தெரியும்
துணை முதல்வர் சிவகுமார் என்னென்ன கேள்விகள் எழுப்பினாரோ, அதற்கு பதிலளிக்க நான் இங்கு நின்றுள்ளேன். என்னை பற்றியும், மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பற்றியும், சிவகுமார் ஏக வசனத்தில் விமர்சித்துள்ளார். நாங்களும் கிராமத்தை சேர்ந்த பிள்ளைகள் தான். ஏக வசனத்தில் பேச எங்களுக்கும் தெரியும். ஆனால், அந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போக மாட்டோம்.இவ்வாறு அவர் பேசினார்.
2 hour(s) ago
2 hour(s) ago
4 hour(s) ago | 1