உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 7 போலீசாரை கொன்ற வழக்கு: 19 ஆண்டுக்கு பின் நக்சல் கைது

7 போலீசாரை கொன்ற வழக்கு: 19 ஆண்டுக்கு பின் நக்சல் கைது

துமகூரு: துப்பாக்கி சூடு நடத்தி ஏழு போலீசாரை கொன்ற வழக்கில், 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நக்சலை, போலீசார் நேற்று கைது செய்தனர்.ஆந்திரா, ஆனந்தபுரத்தின், காரலதின்னே மண்டலத்தின், கேசவாகுரத்தை சேர்ந்தவர் கொடமுலா முத்தியால சந்துரு, 48. இவர் பெங்களூரு மாநகராட்சியில், துப்புரவு தொழிலாளியாக பணியாற்றினார். இவர், நக்சல் கும்பலை சேர்ந்தவர்.துமகூரு, பாவகடாவின், வெங்கடம்மனஹள்ளி கிராமத்தில், 2005 பிப்ரவரி 11ல், போலீசார் முகாமிட்டிருந்தனர். இந்த முகாம் மீது 300 நக்சல்கள் துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஏழு போலீசார் உயிரிழந்தனர். ஐந்து போலீசார் காயமடைந்தனர். முகாம் முன்பாக நின்றிருந்த தனியார் பஸ் ஓட்டுனரும், அந்த சம்பவத்தில் பலியானார்.இது தொடர்பாக, பாவகடாவின், திருமணி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவானது. வழக்கில் தொடர்புடைய 32 பேருக்கு பாவகடா ஜெ.எம்.எப்.சி., நீதிமன்றம், ஜாமின் இல்லா பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதில் முத்தியால சந்துருவும் ஒருவர்.சம்பவம் தொடர்பாக, சமீபத்தில் பெங்களூரின், கோரிபாளையாவில், கொட்டிகெரே சங்கர் என்பவரை கைது செய்தனர். இவர் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். முத்தியால சந்துரு உட்பட மற்றவரை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில் முத்தியால சந்துருவை, திருமணி போலீசார், பெங்களூரில் நேற்று கைது செய்தனர். இவரை பாவகடா ஜெ.எம்.எப்.சி., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி பெங்களூரின், பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை