| ADDED : ஆக 18, 2024 11:29 PM
பெங்களூரு: கர்நாடகாவில் எழு பேருக்கு, 'ஜிகா' வைரஸ் உறுதியாகி உள்ளது. எனவே, எச்சரிக்கையாக இருக்கும்படி, மாநில சுகாதார துறை அறிவுறத்தி உள்ளது.கர்நாடகாவில் கடந்த சில மாதங்களுக்கு முன், டெங்கு பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், 'ஜிகா' வைரஸ் தொற்று அதிகரிக்க துவங்கி உள்ளது.மாநிலத்தின் பெங்களூரில் ஜிகனி பகுதியில் ஐந்தும்; ஷிவமொகாவில் இரண்டு பேருக்கும் என, மொத்தம் ஏழு பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.இதனால் விழித்து கொண்ட சுகாதார துறை, 'தொடர் தலைவலி, கண் சிவத்தல், காய்ச்சல், அலர்ஜி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள சுகாதார மையத்துக்கு சென்று சிகிச்சை பெறுங்கள். கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.பெங்களூரு, ஷிவமொகாவில் ஜிகா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நபர்கள் வசித்த இடம் 'கட்டுப்பாடு மண்டலமாக' அறிவிக்கப்பட்டு உள்ளது.1ஜிகா வைரஸ் தொற்று உறுதியானால், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரின் ரத்த மாதிரிகளும் ஆய்வு செய்ய வேண்டும்2பாதிக்கப்பட்ட நபர்கள், தங்கள் வீட்டில் இருந்து 3 கி.மீ.,க்கு உட்பட்ட இடத்தில் பரிசோதனை செய்ய வேண்டும்3 பாதிக்கப்பட்ட நபரின் வீட்டை சுற்றி, 1 கி.மீ., தொலைவுக்கு கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படும்4ஜிகா வைரசால் பொது மக்கள் அச்சப்பட வேண்டாம்5வைரஸ் தொற்று ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொள்ளவும். இவ்வாறு சுகாதார துறை தெரிவித்துள்ளது.