உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மருத்துவமனை ஊழியரை தாக்கினால் 7 ஆண்டு சிறை

மருத்துவமனை ஊழியரை தாக்கினால் 7 ஆண்டு சிறை

பெங்களூரு : அரசு, தனியார் மருத்துவ ஊழியர்களை தாக்கினால், மூன்று முதல் ஏழாண்டுகள் சிறை தண்டனையும்; 2 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க வகை செய்யும், கர்நாடக மருத்துவ பதிவு மற்றும் இதர சட்டங்கள் திருத்த மசோதாவில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் கையெழுத்திட்டார். இந்தச் சட்டம் அமலுக்கு வந்தது.அரசு, தனியார் மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்ற மாநில அரசு, கடந்தாண்டு சட்டசபை கூட்டத்தொடரில் கர்நாடக மருத்துவ பதிவு மற்றும் சட்டங்கள் திருத்த மசோதாவை நிறைவேற்றியது.இந்த மசோதாவுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்து, கையெழுத்திட்டுள்ளார். 1. மருத்துவ கவுன்சில் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள், நியமன உறுப்பினர்களின் பதவிக் காலம், 5 ஆண்டுகள் என நிர்ணயம்2. இரண்டு முறை தலைவர், துணைத்தலைவராக பதவி வகித்தவர்கள், மீண்டும் அதே பதவிக்கு போட்டியிட தடை3. நியமன உறுப்பினர்கள் கூட்டங்களில் பங்கேற்கலாம்; ஆனால், ஓட்டு போட உரிமையில்லை4. மூன்று ஆண்டுகளுக்கு பதிவாளரும், துணை பதிவாளரும் நியமிக்கப்படுவர்5. மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாதவர்கள், மருத்துவ பயிற்சி மேற்கொள்ள முடியாது. அத்துடன், போலி மருத்துவர்கள் குறித்து, கவுன்சிலில் புகார் அளிக்கலாம். போலி டாக்டர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் உயர்த்தப்பட்டு உள்ளது6. மருத்துவமனை செக்யூரிட்டி, நிர்வாக ஊழியர், ஆம்புலன்ஸ் ஓட்டுனர், உதவியாளர்களை அசிங்கப்படுத்த கூடாது7. டாக்டர்களை வீடியோ பதிவு, ஆடியோ பதிவு, புகைப்படம் எடுப்பது, அசிங்கப்படுத்துவது, டார்ச்சர் கொடுப்பது, ஆபாச வார்த்தைகளால் நேரடியாகவோ அல்லது சமூக வலைதளங்கள் மூலமாக திட்டுவதற்கு தடை8. விதிகளை மீறி, டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்களை தாக்கினால், குறைந்தபட்சம் மூன்று முதல் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும்; 25,000 முதல் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ