உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடி அமைச்சரவையில் 70 பேர் கோடீஸ்வரர்கள்

பிரதமர் மோடி அமைச்சரவையில் 70 பேர் கோடீஸ்வரர்கள்

புதுடில்லி : பிரதமர் மோடியின் அமைச்சரவையில் 30 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 5 பேர் தனிப் பொறுப்புடன் கூடிய அமைச்சர்களாவும், 36 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். மோடியை தவிர்த்து அமைச்சரவையில் 71 பேர் உள்ளனர்.ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்ட அறிக்கை: 71 அமைச்சர்களில் 70 பேர் சராசரியாக 107.94 கோடி ரூபாய் சொத்து வைத்துள்ளனர். ஊரக வளர்ச்சி துறை இணை அமைச்சர் சந்திர சேகர் பெம்மாசானி, 5705.47 கோடி ரூபாய் சொத்துகளுடன்முதலிடத்தில் உள்ளார்.47 பேர் 51 - 70 வயதுக்குப்பட்டவர்கள். 31 - 50 வயதுக்குட்பட்ட 17 அமைச்சர்கள் அமைச்சரவையில் உள்ளனர்.28 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 19 பேர் மீது, கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வெறுப்பு பேச்சு போன்ற கடுமையான வழக்குகள் உள்ளன.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
ஜூன் 12, 2024 11:16

நகரங்களில் சாதாரண வீடுகளின் மதிப்பே கோடியைத் தாண்டும். இக்காலத்தில் கோடி என்பது சாதாரணம். வாழ்க்கையில் எந்த வேலைக்கும் போகாத சின்ன விடியலே ஹம்மர் காரில் வலம் வருகிறார்.


தமிழ்
ஜூன் 12, 2024 11:57

அமித்ஷா மகன் ஜெய்ஷா சைக்கிலில் போகிறாரா ரங்கிடு.


GMM
ஜூன் 12, 2024 08:12

ஜனநாயக சீர்திருத்த சங்கம் மத்திய அமைச்சரவை கோடீஸ்வர் விவரம் மட்டும் கொடுப்பது ஏன்? மாநில, உள்ளாட்சி அமைப்புகள் பிரதிநிதிகள், மற்றும் ஆளும், எதிர்க்கட்சிகள் விவரம் கொடுத்தால் வெளியிட மாட்டார்களா? சங்கத்தின் உள்நோக்கம் ஒரு குறிப்பிட்ட கட்சி மீது மட்டும் குறைபாடு காண்பது. இதில் சீர்திருத்தம் காண முடியாது. மிரட்டி பணம் சம்பாதிக்க முடியும்?


Dr K SIVARAMAN
ஜூன் 12, 2024 07:25

தமிழகத்தில் வார்டு கவுன்சிலரே பல கோடிகளில் தான் புரளுகின்றனர்


kannan s
ஜூன் 12, 2024 07:15

தவறே செய்யாத அரசியல்வாதிகளே இல்லை என்றாகிவிடும்.


ஜஜ
ஜூன் 12, 2024 06:25

ஊருக்கு உபதேசம்


sankaranarayanan
ஜூன் 12, 2024 04:33

மோடி ஒருவர்தான் பாமர மக்கள் அது போதுமய்யா மக்களுக்கு


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை