உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரவிகுளம் பூங்காவில் 827 வரையாடுகள்

இரவிகுளம் பூங்காவில் 827 வரையாடுகள்

மூணாறு:இரவிகுளம் தேசிய பூங்காவில் புதிதாக பிறந்த 144 குட்டிகள் உள்பட 827 வரையாடுகள் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.கேரளா மூணாறு அருகில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்காவில் அபூர்வ இன வரையாடு அதிகம் உள்ளன. மார்ச் இறுதியுடன் வரையாடுகளின் பிரசவம் முடிவுக்கு வரும். அதன் பிறகு கணக்கெடுப்பு துவங்கும். அதன்படி இரவிகுளம், பாம்பாடும்சோலை ஆகிய தேசிய பூங்காக்கள், சின்னார் வன உயிரின சரணாலயம் ஆகியவற்றில் வரையாடுகளின் கணக்கெடுப்பு மூணாறு வன உயிரின பிரிவு தலைமையில் ஏப்.29ல் துவங்கி மே 2 வரை நடந்தது. அதில் இரவிகுளம் தேசிய பூங்காவில் புதிதாக பிறந்த 144 குட்டிகள் உள்பட 827 வரையாடுகள் உள்ளன என தெரிய வந்ததாக வனவிலங்கு பாதுகாவலர் வினோத், உதவி பாதுகாவலர் நிதின் லால் தெரிவித்தனர். தமிழக எல்லையோர பகுதிகளில் தமிழக வனத்துறையினருடன் இணைந்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்பகுதிகளில் வரையாடுகளின் எண்ணிக்கை குறித்து தகவல் வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்தாண்டு இரவிகுளம் தேசிய பூங்காவில் புதிதாக பிறந்த 128 குட்டிகள் உள்பட 803 வரையாடுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை