உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 8ம் வகுப்பு மாணவி கர்ப்பம் தலைமை ஆசிரியர் கைது

8ம் வகுப்பு மாணவி கர்ப்பம் தலைமை ஆசிரியர் கைது

சிக்கபல்லாப்பூர் : தன்னிடம் படித்த, எட்டாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய, அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.சிக்கபல்லாப்பூர் சித்லகட்டாவில் அரசு பள்ளி உள்ளது. இங்கு 13 வயது மாணவி, எட்டாம் வகுப்பு படிக்கிறார். கடந்த சில தினங்களாக, மாணவிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வாந்தி எடுத்தார். சந்தேகம் அடைந்த பெற்றோர், நேற்று முன்தினம் மகளை, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.டாக்டர் பரிசோதித்த போது, சிறுமி மூன்று மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளிடம் விசாரித்த போது, தலைமை ஆசிரியர் வெங்கடேஷ், 50 அடிக்கடி மிரட்டி, பலாத்காரம் செய்ததாக கூறினார். இதுகுறித்து டாக்டர், சித்லகட்டா போலீசில் புகார் அளித்தார். வெங்கடேஷ் நேற்று கைது செய்யப்பட்டார்.கடந்த எட்டு மாதங்களுக்கு முன், மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதுபற்றி தலைமை ஆசிரியரிடம் மாணவி கூறி உள்ளார். இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட தலைமை ஆசிரியர், மாணவியை மிரட்டி தானும் பலாத்காரம் செய்தது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

subramanian
ஜூன் 02, 2024 19:15

வக்ர புத்தி கொண்டவர்கள் பயப்படும்படி நம் நீதிபதிகள் தீர்ப்பளிக்கவில்லை. சட்டம் செயல்படுத்தப்படவில்லை. இப்படிப்பட்ட சமூக கொடுமைகளை , கடுமையான தண்டனை கொடுத்தால் மட்டுமே தடுக்க முடியும். நீதிமுறை மிகவும் தாமதமாவதால் , கேஸ் முடிய எல்லாம் இருப்பது வருஷம் ஆகும் , அதற்குள் நமக்கும் வயது ஆகிவிடும் அப்போது செத்தால் என்ன ? என்ற மனப்பாங்கு சமூகத்தில் இருக்கிறதா? அதனால்தான் அரசியல்வாதிகள் துணிந்து ஊழல் , மற்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறர்களா?. நீதிபதிகளும், நீதிமன்றமும் இதுகுறித்து ஆராயவேண்டும்.


Sridharan Venkatraman
மே 31, 2024 09:15

தமிழ் நாடு முதல்வர் இவருக்கு நல்ஆசிரியர் விருது கொடுக்க பரிவு செய்யலாம்.


R KUMAR
மே 29, 2024 21:14

இவருடைய ....................யை வெட்டினால் என்ன


ram
மே 29, 2024 12:55

தகுதி இல்லாதவர்கள் ஆசிரியராக நியமித்தால் இப்படித்தான்,


மேலும் செய்திகள்