உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புனே கார் விபத்து வழக்கில் 900 பக்க குற்றபத்திரிக்கை தாக்கல்

புனே கார் விபத்து வழக்கில் 900 பக்க குற்றபத்திரிக்கை தாக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புனே: புனேயில் போதையில் சொகுசு காரை ஓட்டி இருவர் பலியான சம்பவத்தில் இன்று மஹாராஷ்டிரா போலீசார் 900 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் கடந்த மே 19ம் தேதி, 'போர்ஷ்' என்ற விலையுயர்ந்த கார் சாலையில் தாறுமாறாகச் சென்று விபத்தை ஏற்படுத்தியது. இதில், பைக்கில் சென்ற இரண்டு சாப்ட்வேர் இன்ஜினியர்கள் பலியாகினர்.பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபரின், 17 வயது மகன் மதுபோதையில் அந்த காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. சிறுவன் கைது செய்யப்பட்டு மே 19ம் தேதி, அந்த சிறுவனுக்கு சிறார் நீதிமன்ற நீதிபதி ஜாமின் வழங்கினார்.இந்த வழக்கில் சிறுவனின் தந்தை , தாத்தா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கில் மஹாராஷ்டிரா குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் இன்று புனே சிறப்பு கோர்ட்டில் குற்றவாளிகளுக்கு எதிராக 900 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்புசாமி
ஜூலை 27, 2024 10:03

,நீதிமன்றத்தைக் குழப்ப 900 பக்கம்.போதுமா? ஒரு மூவாயிரம்.பக்கமாவத் தேத்தி சீக்கிரம் விடுதலை செஞ்சுருங்க.


vijai
ஜூலை 26, 2024 23:23

கார் ஓட்டுனபொறுக்கிய என் கவுண்டர் பண்ணனும் 17 வயது சிறுவன் அல்ல எல்லாம் தெரிந்த பொறுக்கி இரண்டு உயிர் பலியானதற்கு காரணமான இவனை என்கவுண்டர்


Iniyan
ஜூலை 26, 2024 20:46

இதெல்லாம் தேவை இல்லை. இரண்டு வரி பொடியும். தீர்ப்புக்கு 4 நாட்கள் போதும். தண்டனைக்கு ஒரே ஒரு குண்டு போதும்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ