உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 97.92 சதவீத ரூ. 2000 நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பின

97.92 சதவீத ரூ. 2000 நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பின

மும்பை : உயர்மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுகள் இதுவரை 97.92 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2023ம் ஆண்டு மே 19ம் தேதி, ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அப்போது புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 3.56 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.இந்நிலையில் ரிசவர் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த மார்ச் 01-ம் தேதி நிலவரப்படி 2000 ரூபாய் நோட்டுகள் 97.62 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளதாகவும்; இன்னும் ரூ. 8,470 கோடி மதிப்பிலான நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளது.தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் இறுதி நிலவரப்படி 97.76 சதவீதம் ரூ. 2000 நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டுள்ளன. இன்று (ஆக.01)ம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த ஜூலை மாதம் வரையிலான நிலவரப்படி, பொதுமக்களிடம் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 97.98 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளன. இன்னும் 2.08 சதவீதம் என ரூ.7,409 கோடி மதிப்பிலான ரூ. 2000 நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளன. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Khajamaideen
ஆக 03, 2024 10:43

என்னிடம் 4 நோட்டுகள் உள்ளன எப்படி மாற்றுவது


RAAJ68
ஆக 02, 2024 16:18

எதுக்கு பிரிண்ட் அடிக்கணும் எதுக்கு திருப்பி வாங்கணும் மீன் வேலை பிரின்ட் அடிக்க எவ்வளவு செலவாயிற்று. திரும்பி வந்த நோட்டுகளை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள். புழக்கத்தில் நூறு ரூபாய் 50 ரூபாய் இருபது ரூபாய் கிடைப்பதில்லை இது பற்றி கொஞ்சமாவது உங்களுக்கு அக்கறை உள்ளதா. கிழிந்த பத்து ரூபாய் நோட்டுகளை தலையில் கட்டுகின்றனர் வணிகர்கள் யார் வாங்குவது.


S R George Fernandaz
ஆக 02, 2024 09:21

சும்மா தட்டி விடுங்க. ஒரு மாசம் தாண்டி 100% ன்னு அடிச்சு விடுங்க. யாரு கேள்வி கேப்பா ? நீங்க சொன்ன சரி.


Raj
ஆக 02, 2024 08:00

அதாவது பண மதிப்பிழப்பு அறிவித்ததால் ஒரு பிரயோசனமும் இல்லை. மக்கள் செத்தது தான் மிச்சம்


N Sasikumar Yadhav
ஆக 02, 2024 07:50

கோபாலபுரத்தில் சோதனையிட்டால் கிடைக்க வாய்ப்பிருக்கிறது


Sck
ஆக 02, 2024 05:36

மீதம் வர மறுக்கும் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்து விடுங்கள். தானாக வந்துவிடும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை