உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பகவத் கீதையில் 700 ஸ்லோகங்கள் சொல்லி அசத்தும் 12 வயது சிறுமி  

பகவத் கீதையில் 700 ஸ்லோகங்கள் சொல்லி அசத்தும் 12 வயது சிறுமி  

இன்றைய நவீன காலகட்டங்களில் பெரியவர்களுக்கு தெரியாத விஷயங்கள் கூட, குழந்தைகளுக்கு தெரிகின்றன.பெரியவர்கள் கூட ஏதாவது ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள சற்று நேரம் ஆகலாம். ஆனால் குழந்தைகள் சட்டென புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்படுகின்றனர்.அதே நேரம் தற்போது உள்ள குழந்தைகளுக்கு புதிதாக ஏதாவது கற்றுக் கொள்வதிலும் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. ஒன்றரை வயது குழந்தைகள் கூட தற்போது, இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து வருகின்றனர்.அந்த வகையில், பெங்களூரை சேர்ந்த 12 வயது சிறுமி, பகவத் கீதையில் 700 ஸ்லோகங்கள் சொல்லி அசத்துகிறார்.

ஜோகுபாளையா

பெங்களூரு, ஹலசூரு ஜோகு பாளையாவில் வசிப்பவர் நவீன். இவரது மனைவி சிம்பு. இந்த தம்பதி மகள் சிரி, 12. பெங்களூரு ரிச்மென்ட் சதுக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார். இவர் பகவத் கீதையில், 700 ஸ்லோகங்களைச் சொல்லி அசத்துகிறார்.இதுகுறித்து சிரி பெருமையுடன்கூறியதாவது:என் பாட்டி கீதா, ஆசிரியையாக உள்ளார். எனக்கு 6 வயது இருக்கும்போது, அவரது பள்ளிக்கு என்னையும் அழைத்துச் செல்வாராம். அவரது பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு பகவத் கீதை கற்றுக் கொடுப்பார். அப்படியே எனக்கும் கற்றுக் கொடுத்தார். நாட்கள் செல்லச் செல்ல எனக்கும் பகவத் கீதை மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது.

அறம், நெறி

அறம், நெறி தவறாமல் வாழ்வது, வாழ்க்கையில் நன்மை தீமைகளை அறிவது. எந்தெந்த சூழ்நிலை எவ்வாறு செயல்பட வேண்டுமென, பகவத் கீதை மூலம் கற்றுக் கொண்டேன்.நான் கற்றுக் கொண்டதை மற்றவர்களுக்கும் சொல்லித் தர ஆசைப்படுகிறேன். பெங்களூரு இஸ்கான் கோவில் உட்பட பல கோவில்களில் பகவத் கீதையை பற்றி சொற்பொழிவு நிகழ்த்தி உள்ளேன். இதனால் எனக்கு கோவில்களில் இருந்து பாராட்டு கிடைத்தது. இது என் வாழ்வில் மகிழ்ச்சியான தருணம்.

பாட்டிக்கு நன்றி

பகவத் கீதை சொற்பொழிவு ஆற்ற வேண்டும் என்றாலே, கோவில்களில் இருந்து என்னை அழைக்கின்றனர். இதற்காக என் பாட்டிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். என் அப்பா நவீன், இன்ஜினியராக உள்ளார். அம்மா ஷிம்பு, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் உதவியாளராக வேலை செய்து வருகிறார்.இவ்வாறு சிரி கூறினார்.சிரியின் சேவையை பாராட்டி, அவருக்கு கர்நாடக ஆரிய வைஸ்ய மகா சபா, இன்று 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்குகிறது.பெங்களூரு டவுன் ஹாலில் நடக்கும் நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, சிரிக்கு விருந்து வழங்கி பாராட்டுகிறார்.சிரி மென்மேலும் வளர நாமும் பாராட்டலாமே. இவரது பாட்டி கீதாவின் மொபைல் எண்: 97414 13418


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Rengaswamy S
ஜூலை 14, 2024 14:28

ஸர்வ மங்களங்களும் குழந்தையை சேரட்டும்


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 14, 2024 12:56

கிருஷ்ணனுடைய அருள் பூரணமாகக் கிடைக்கட்டும் ..... தமிழ்நாடாக இருக்க வாய்ப்பில்லை என்கிற சந்தேகத்துடன்தான் செய்தியைப் படித்தேன் ...


Kannan
ஜூலை 14, 2024 10:10

வாழ்த்துக்கள் ஜெய் ஸ்ரீ ராம்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ