உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சமையல் அறைக்குள் 13 அடி நீள கருநாகம்

சமையல் அறைக்குள் 13 அடி நீள கருநாகம்

சிக்கமகளூரு: சமையல் அறைக்குள் பதுங்கிய 13 அடி நீள கருநாகம் பிடிபட்டது.சிக்கமகளூரின் என்.ஆர்., புரா ஷெட்டிகொப்பா கிராமத்தின் மஞ்சுநாத். இவரது மனைவி நேற்று மதியம் சமையல் செய்வதற்காக, சமையல் அறைக்கு சென்று பாத்திரங்களை எடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு கருநாகம் படம் எடுத்தது. அதிர்ச்சி அடைந்த மஞ்சுநாத், மனைவி அலறி அடித்து வெளியே ஓடினார். வீட்டின் கதவையும் மூடினார்.தகவல் அறிந்த பாம்பு பிடிவீரர் ஹிதேந்திரா அங்கு வந்தார். அரைமணி நேரத்திற்கும் மேலாக போராடி, கருநாகத்தை பிடித்துச் சென்று, வனப்பகுதிக்குள் விட்டார். மழை காரணமாக குளிர் நிலவுவதால், குளிருக்கு இதமாக சமையல் அறைக்குள், கருநாகம் பதுங்கியதாக, ஹிதேந்திரா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை