உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செங்கல் சூளை சுவர் இடிந்து ஒருவர் பலி

செங்கல் சூளை சுவர் இடிந்து ஒருவர் பலி

மஹராஜ்கஞ்ச்:உத்தர பிரதேசத்தில், செங்கல் சூளை சுவர் இடிந்து ஒரு தொழிலாளி உயிரிழந்தார்.காயம் அடைந்த 6 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உ.பி., மாநிலம் மஹராஜ்கஞ்ச் மாவட்டம் பிடவுலி அருகே கம்ஹாரியா குர்த் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் நேற்று காலை தொழிலாளர்கள் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர்.திடீரென அங்கிருந்த ஒரு சுவர் இடிந்து விழுந்தது. இடிபாட்டுக்குள் சிக்கிய குஷி நகரைச் சேர்ந்த அசோக் சஹானி,35, அதே இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தார்.தகவல் அறிந்து வந்த போலீசார், இடிபாட்டுக்குள் காயங்களுடன் கிடந்த 6 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ