உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூடியே கிடக்கும் மினி சமுதாய பவன்

மூடியே கிடக்கும் மினி சமுதாய பவன்

தங்கவயல் : கழிப்பறை வசதி இல்லாததால், சாம்பியன் ரீப் 'பி' பிளாக் பகுதியில் கட்டப்பட்ட மினி சமுதாய பவன் 12 ஆண்டுகளாக திறக்கப்படவே இல்லை.தங்கவயல் 13வது வார்டில் உள்ளது, சாம்பியன் ரீப் 'பி' பிளாக். இங்கு நகராட்சி நிதி 50 லட்சம் ரூபாய் செலவில் ம.ஜ.த., கவுன்சிலர் குலசேகர் முயற்சியில் மினி சமுதாய பவன் கட்டப்பட்டது. 2012ல் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன.அப்போதைய எம்.எல்.ஏ.,வாக பா.ஜ.,வின் ராமக்கா. நகராட்சி தலைவராக ம.ஜ.த.,வின் பக்தவச்சலம் இருந்தனர். இவர்கள் இணைந்து திறந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் இருவரும் எதிரும், புதிருமாகவே இருந்தனர். இதனால் மினி சமுதாய பவனை திறப்பதில் அக்கறை காட்டவில்லை.இப்பகுதியினரின் பெயர் சூட்டல், பிறந்த நாள், படத்திறப்பு, காதுகுத்து, நிச்சயதார்த்தம் என சிறு சிறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக, இந்த பவன் கட்டப்பட்டது.இதை திறக்கக் கோரி நகராட்சியில் அப்பகுதியினர் கோரிக்கை மனு அளித்தனர். ஆனாலும், எந்த பயனும் இல்லை. இந்த சமுதாய பவனில் கழிப்பறை வசதி இல்லை. கழிப்பறை கட்ட வேண்டும் என்பது தான் குறைபாடாக உள்ளது. இதனால், பூட்டியே வைத்துள்ளனர்.இக்கட்டடம் பழுதடைகிறது. எப்போது திறப்பார்கள் என அப்பகுதியினர் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ