உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மரக்கிளை விழுந்ததில் சைக்கிளில் சென்றவர் பலி

மரக்கிளை விழுந்ததில் சைக்கிளில் சென்றவர் பலி

சிவில் லைன்ஸ்: வடக்கு டில்லியின் கைபர் கணவாய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மரத்தின் கிளை விழுந்ததில் சைக்கிளில் சென்ற ஒருவர் உயிரிழந்தார்.அருணா நகரைச் சேர்ந்தவர் அனீஸ். இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 மணி அளவில் கைபர் கணவாய் பகுதி அருகே பிரதான சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பலத்த காற்று வீசியது. சாலையோர மரத்தின் கிளை முறிந்து, அனீஸ் மீது விழுந்தது.இதில் பலத்த காயமடைந்த அவரை அவரது மகன் சர்ப்ராஜ் மீட்டு, பரமானந்த் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை அதிகாரி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை