உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுமி

பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுமி

பங்கார்பேட்டை: பங்கார்பேட்டை பஸ் நிலையத்தில் கடந்த 6ம் தேதி மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி தனியாக நின்றிருந்தார். ஆட்டோ டிரைவர் சிவகுமார், சுப்பிரமணி ஆகிய இருவரும், சிறுமியை அழைத்துச் சென்று பங்கார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். சிறுமியை, மருத்துவ பரிசோதனைக்கு பின், கோலார் அந்தரகங்காவில் உள்ள மனநலம் பாதிக்கப் பட்டவர்களுக்கான உறைவிட பள்ளியில் போலீசார் சேர்த்தனர்.இதற்கிடையில், பெங்களூரில் ஒரு சிறுமி காணாமல் போனதாக பெற்றோர், போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அப்போது பங்கார்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறுமி ஒருவர் கிடைத்த விபரத்தை போலீசார் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் நேற்று பங்கார் பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். போலீசார் உதவியுடன் உறைவிட பள்ளிக்கு சென்று, சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை