கிலோ தக்காளி ரூ.100ஐ தாண்டியது
தங்கவயல்: தங்கவயலில், ராபர்ட்சன் பேட்டை எம்.ஜி. மார்க்கெட் தான் பெரிய மார்க்கெட். இங்கு, தங்கவயலின் கிராம பகுதிகள் மற்றும் கோலார், முல்பாகல், ஆந்திராவின் குப்பம், பூதகூர், வி.கோட்டா, ராஜ்பேட் ரோடு என பல இடங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருவதுண்டு.தக்காளி வரத்து குறைந்து விட்டது. இதனால் தக்காளி விலை அதிகரித்துள்ளது. முல்பாகலில் தக்காளி மண்டியில் 15 கிலோ தக்காளி ஒரு பெட்டி 800 முதல் 1,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.இதனால், சில்லறை விற்பனையில் கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இங்கிருந்து தான் ஆந்திரா, தமிழகம், மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுவது வழக்கம். 30 சதவீத தக்காளி தான் வந்ததால், பற்றாக்குறை ஏற்பட்டதாக மொத்த வியாபாரி செங்கா ரெட்டி என்பவர் தெரிவித்துள்ளார்.