மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
7 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
13 hour(s) ago
உத்தர கன்னடா மாவட்டம், ஹொன்னாவரில் இருந்து 7 கி.மீ., தொலைவில் அப்சர கொண்டா நீர்வீழ்ச்சி அமைந்து உள்ளது. 10 மீட்டர் உயரத்தில் இருந்து கொட்டும் குட்டி நீர்வீழ்ச்சி இது.கடலை பார்த்தபடி இந்த நீர்வீழ்ச்சி கொட்டுவது இதன் சிறப்பு அம்சமாகும். தேவதைகள், சொர்க்கத்தில் இருந்து வந்து, இந்த நீர்வீழ்ச்சியில் குளித்ததால் அப்சர கொண்டா என்று பெயர் வந்ததாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்ல, தனிப்படிகள் கட்டப்பட்டு உள்ளன. நீர்வீழ்ச்சி கொட்டும் இடத்தில் தேங்கும் நீர் பாதுகாப்பானது. இதில் இறங்கி குளிக்கலாம், விளையாடலாம்.நீர்வீழ்ச்சியில் இருந்து சில நிமிடங்கள் நடந்து சென்றால், மலையில் இருந்தபடி, அழகான சுற்றுப்புறத்தை காணலாம். மலையில் இருந்தபடி கடலுக்கடியில் சூரியன் உறங்க செல்வதை காணலாம்.அப்சரா கொண்டா மலையில் சிறியது, பெரியது என பாண்டவர் குகைகள் உள்ளன. இங்கு பாண்டவர்கள் தங்கியிருந்ததாக இப்பகுதி மக்கள் நம்புகின்றனர். இதை கர்நாடக சுற்றுலா துறை, சுற்றுலா தலமாக பெரியளவில் மேம்படுத்தி உள்ளது.இம்மலையில் அழகான பூங்காவும், அங்கு அமைந்துள்ள குளத்தில் படகு சவாரியும் செய்ய முடியும். இதனால் தினமும் சுற்றுலா பயணியரின் வருகை அதிகரித்து வருகிறது.முருடேஸ்வர் அருகில் உமாம்பா மஹா கணபதி கோவில், உக்ர நரசிம்ம கோவில், ஹொசநகர் ராமசந்திரபுரா மடத்தின் கிளை மடமும் உள்ளன. காசர்கோட் கடற்கரை, பசவராஜா துர்கா, இடகுஞ்சி மஹா கணபதி கோவில் உட்பட பல சுற்றுலா தலங்களும் உள்ளன.15_Article_0003, 15_Article_0004தேவதைகள் குளித்த 'குட்டி' அப்சர கொண்டா நீர்வீழ்ச்சி. (அடுத்த படம்) அப்சர கொண்டா மலையில் தென்படும் கடற்கரை.- நமது நிருபர் -
7 hour(s) ago | 2
13 hour(s) ago