உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உறவுக்கார பெண்ணை கொன்று வாலிபர் தற்கொலை முயற்சி

உறவுக்கார பெண்ணை கொன்று வாலிபர் தற்கொலை முயற்சி

கபஷேரா:தென்மேற்கு டில்லியில் இளம்பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். கொலையாளியான உறவினர் ரயில் முன்பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.தென்மேற்கு டில்லியின் கபஷேரா பகுதியில் 28 வயது பெண் ஒருவர் புதன்கிழமை இரவு 10:38 மணியளவில் கொலை செய்யப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.அந்த பெண் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். அவரை அவரது உறவினர் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் நேற்று காலை 8:30 மணியளவில், பிஜ்வாசன் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் 32 வயது வாலிபர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அவரை மீட்ட போலீசார், சபதர்ஜங் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் கபஷேரா இளம்பெண் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பது விசாரணையில் தெரிய வந்தது.போலீஸ் விசாரணைக்கு பயந்து ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை