மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
3 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
3 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
4 hour(s) ago
ரோகினி: பூங்கா ஒன்றில் இளைஞர் ஒருவர் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.மேற்கு டில்லியின் ரோகினி பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், மரத்தில் துாக்கில் தொங்கியபடி சடலமாக இருப்பதாக விஜய் விஹார் போலீசாருக்கு அதிகாலை 5:30 மணி அளவில் தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். சடலத்தை மீட்டு, பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர், ஓவிந்தர் என்றும் மது அருந்தும் பழக்கத்திற்காக அவரது குடும்பத்தினர் அவரை கண்டித்துள்ளனர்.இதனால் அவர்களுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். எனினும் தற்கொலைக்கு வேறேதும் காரணம் இருக்குமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஓவிந்தர், கூலி வேலை செய்து வந்துள்ளார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு குடும்ப உறுப்பினர்களிடம் அவரது சடலம் ஒப்படைக்கப்பட்டது.
3 hour(s) ago | 1
3 hour(s) ago
4 hour(s) ago